0007.2 தமிழைப் பேச்சு மொழியாக நிலைக்கச் செய்க!

v\:* {behavior:url(#default#VML);}
o\:* {behavior:url(#default#VML);}
w\:* {behavior:url(#default#VML);}
.shape {behavior:url(#default#VML);}

Normal
0
false

false
false
false

EN-US
X-NONE
TA

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

தமிழைப் பேச்சு மொழியாக நிலைக்கச் செய்க!

By இலக்குவனார் திருவள்ளுவன்

First Published : 19 July 2013 02:37 PM IST

  • Description: http://media.dinamani.com/2013/07/19/tamilannai.jpg/article1691596.ece/alternates/w460/tamilannai.jpg

தமிழ், தமிழர்களுக்கான கல்விமொழியாகவோ, ஆட்சிமொழியாகவோஅலுவலக மொழியாகவோ, வழிபாட்டு  மொழியாகவோ, வணிக மொழியாகவோ, கலை மொழியாகவோ இல்லை என்பது இக்காலத்தில் வாழும் நம் அனைவருக்கும் இழிவுசேர்க்கும் நிலையாகும். இவை எல்லாவற்றிலும் மோசமான துயர நிலை என்பது தமிழ்தமிழர்களின் பேச்சுமொழி என்ற நிலையையும் இழந்துவருவதுதான்.

தமிழ், தமிழ்நாட்டின் மொழியாக நிலைப்பதற்குக் குறைந்தது மக்களின்பேச்சுமொழியாகவாவது இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் தமிழில் பேசுவோர்சிறுபான்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ‘‘தமிழை வீட்டில் பேசுகிறோமே!எதற்குத் தமிழ்மொழிக் கல்வி?’’ எனப் பிற மொழிகளை எடுத்தவர்கள் ‘‘பிறமொழிகளைத்தான் பள்ளியில் படிக்கின்றோமே! எதற்குத் தனிப் பயிற்சி தேவை’’ எனஎண்ணுவதில்லை. மாறாக வீட்டிலும் ஆங்கிலம் முதலான அயல்மொழிகளே ஆட்சிபுரியும்நிலைக்குக் கொண்டு வந்து விட்டனர்.

தமிழ்நாட்டவருடன் இயைந்து வாழத்தமிழில் பேசவாவது தெரிந்திருக்க வேண்டும்என்ற உணர்வை அனைவரும் பெற வேண்டும். இச்சூழல் ஏற்படின் தமிழ் பிறநிலைகளிலும் முதன்மை பெறும் என்பதில் ஐயமில்லை. மறந்து போன தொலைந்து போகும்நிலையில் உள்ள மூவா முத்தமிழை என்றும் உள்ள நிலைமொழியாகப் பேணுவதற்குப்பேச்சுமொழி என்ற நிலையையாவது முதலில் உருவாக்க வேண்டும். மாணவ  நிலையிலேயேதமிழ் பேச்சு மொழியாக அமைய பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்தால்  தமிழ்என்றும் வாழும்.

கடந்த பல ஆண்டுகளாகவே பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் – குறிப்பாகஅனைத்து ஆங்கிலவழிப்பள்ளிகளிலும் – தமிழில் பேசினால் தண்டனை எனஅச்சுறுத்தித்  தமிழில் பேசுவது இழிவானது என்பது போன்ற சூழல்இளந்தலைமுறையினரிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இதனை உடனடியாகப்போக்குவதற்குப் பள்ளிக்கல்வித்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்வழிப் பள்ளிகளாக இருந்தாலும் ஆங்கிலவழிப் பள்ளிகளாக இருந்தாலும், மத்திய அரசின் பள்ளிகளாக இருந்தாலும், தமிழே கற்பிக்கப்படாத பள்ளிகளாகஇருந்தாலும், எல்லாப் பள்ளிகளிலும்  வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகியமூன்று நாள்களிலும் மாணாக்கர்களும் ஆசிரியர்-பணியாளர்களும் தமிழிலேயே  பேசவேண்டும் என அறிவுறுத்த வேண்டும். பிற நாள்களில் அவர்கள் எடுத்துள்ள  விருப்பமொழியில் பேசலாம். இதற்கெனத்  தமிழ் கற்பிக்காத பள்ளிகளில்தமிழ்ப்பேச்சுப் பயிற்சி அளிக்கச் செய்ய வேண்டும்.

அனைத்து மாணவர்களும் தமிழறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகமாண்புமிகு முதல்வர் அவர்கள், அனைத்துப் பள்ளிகளிலும் அறிவியல் தமிழ்பாடத்திட்டத்தைக் கொண்டுவந்தார். எனினும்  பள்ளி நடத்துவோரும்ஆசிரியர்களும் முறையாகச் செயல்படுத்தாமல் அருமையான திட்டத்தை ஒன்றும்இல்லாமல் ஆக்கிவிட்டனர்.

இன்றைய மாணாக்கர்களுக்கும் இளைஞர்களுக்கும் தமிழில் உறவுப் பெயர்கள், எண்ணுப் பெயர்கள், விலங்குகள், பறவைகள், செடி, கொடிகள் முதலான உயிரினப்பெயர்கள், வணங்குதல், வாழ்த்துதல் தொடர்பான தொடர்கள்முகவரிகள் முதலானதகவல் விவரங்கள் ஆகியவை தெரியவில்லை. இந்த நிலை தொடரும் வகையில் அரசுவாய்மூடி அமைதி காக்கக் கூடாது.

தமிழே பேச்சு மொழி என்பதை நடைமுறைப்படுத்தினால் குறுகிய காலத்திலேயேவளரும் தலைமுறையினரைத் தமிழ் அறிந்தவர்களாக  மாற்றிவிடலாம். ஆதலின் தமிழ்உணர்வுடனும், தமிழ்நல விழைவுடனும் வளரும் தலைமுறையினரின் மொழியாக வளர்தமிழைமாற்ற  அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டுதமிழ்மொழியைப்பேச மறுப்பின் அல்லது இந்நடவடிக்கைக்கு எதிராகச் செயல்படின்அவர்கள் அவரவர் மொழி பேசும் மாநிலத்திற்குச் செல்ல வேண்டும்.  தமிழராகஇருந்து கொண்டே தமிழ் பேச மறுப்பின் அவர்களை முற்றிலும் புறக்கணிக்கவேண்டும். அரசின் எந்தச் சலுகையும் கிடைக்காத வண்ணம்  செய்ய வேண்டும்.ஆனால், அத்தகு  நிலை வராது என எண்ணலாம். தமிழ் மக்கள் தமிழிலேயே பேசவேண்டும் என்ற உறுதிப்பாட்டை எடுத்துவிட்டால் அயலவரும் தமிழ் பேசத் தாமாகவேமுன்வருவர்.

தமிழ் பேச்சுமொழியாக நடைமுறையில் இருந்தால்தான் பிற நிலைகளிலும்பயன்பாட்டிற்கு வரும். பயன்பாட்டில் உள்ள மொழிதானே வாழும்! ஆதலின் இக்காலத்தலைமுறையினரின் நாக்குகளில் தமிழ் நடமாட  உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் வாழ்ந்தால்தான் தமிழர் வாழ்வர்!என்பதை வலியுறுத்துவார் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார். ஆதலின் தமிழைப் பேசியாவது வாழ வைத்துநாமும் வாழ்வோம்!

வாழ்க தமிழ் என முழங்கிப் பயனில்லை! வாசிப்பில் மறந்து போன தமிழை வாய்மொழியிலாவது  நிலைக்கச் செய்வோம்!

பேசுவோம் தமிழை! பேணுவோம் நம்மை!

(கட்டுரையாளர்: தலைவர், தமிழ்க்காப்புக் கழகம்)

நன்றி  – தினமணி

http://dinamani.com/special_stories/2013/07/19/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/article1691568.ece

 

கருத்துகள்(8)

ஒவ்வொரு வரியுமே சிறப்பாக எழுதிக் கோக்கப்பட்டகருத்துமாலையாக உள்ளது. ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று வற்புறுத்தும்பொழுது தமிழில் பேச வேண்டும் என வற்புறுத்துவதும்சரிதான்.

தலைப்பைப் படித்ததும் ஆஙகிலத்திணிப்பிற்குக் காரணமானஅ.தி.மு.க.விற்கு வால் பிடிக்கிறாரோ என நினைத்தேன். ஆனால், கட்டுரையைப்படித்ததும் மிகச்சரியாக எழுதி உள்ளார் என்பதைப் புரிந்து கொண்டேன்.ஆங்கிலக் கல்வியைத் திணிக்கும் அரசு தமிழ்ப் பேச்சையாவதுநடைமுறைப்படுத்தட்டும்.

வாழ்க தமிழ் என முழங்கிப் பயனில்லை! வாசிப்பில் மறந்து போனதமிழை வாய்மொழியிலாவது நிலைக்கச் செய்வோம்! – என அருமையாகக்குறிப்பிட்டுள்ளார். திரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் சொல்வதுபோல், பள்ளிகளில்பேச்சுமொழியாகத் தமிழை அறிவித்தால் கண்டிப்பாகத் தமிழ் வாழும்.

இன்றைய மாணவர்களுக்குத் தமிழில் எண்கள்கூடத் தெரியவில்லை.ஆகவே பேச்சுத்தமிழையாவது வளர்க்க வேண்டும் எனத் திரு இலக்குவனார்திருவள்ளுவன் வலியுறுத்துவது சரிதான். பள்ளிகளில் கட்டாயம் தமிழ் பேசவேண்டும் என்பது அதற்கு உதவியாக இருக்கும். அரசு ஆணை பிறப்பித்து நடவடிக்கைஎடுக்க வேண்டும். திருவள்ளுவனார்க்கும் தினமணிக்கும் பாராட்டுகள்.

ஆங்கிலக் கல்வியைத்திணிக்கும் தமிழக அரசு தமிழில் பேசவாவதுநடவடிக்கை எடுக்கலாம் என்பது நல்ல வேண்டுகோள்.இது செவிடன் காதில் ஊதியசங்காகுமா? பலன் அளிக்குமா?

படிப்புதான் ஆங்கிலத்தில். பேசுவதாவது தமிழில்இருக்கட்டுமே என நல்ல கனவுகாண்கிறார் இலக்குவனார் திருவள்ளுவன்.ஆங்கிலத்தைத்திணிக்கும் தமிழக அரசு இதில் கவனம் செலுத்துமா?தமிழ்அமைப்புக்ள்போராடினால் ஒரு வேளை நடந்தாலும் நடக்கலாம்.

இலக்குவனார் வருத்தப்படும் நிலைமைதான் உள்ளது. நேற்று என்தம்பி பையனிடம் பெரியம்மாவிடம் 10 ரூபாய் வாங்கி வா என்றேன். பத்து என்றால்எவ்வளவு என்கிறான். ஆகவே வாரத்தில் மூன்று நாள் தமிழில் பேச வேண்டும்என்றால்தான் தமிழ் வாழும்.

எதிர்வரும் ஜனவரி 18 ஆம் நாள் சனிக்கிழமை தொடங்கிதொடர்ந்து வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் இறை வணக்கம் செய்வதற்குதிருக்குறள் நூலுடன் குடும்பமே தமிழ்ப்பள்ளிகளுக்குச் செல்லும் வழக்கத்தைதமிழக முதல்வர் உலக அளவில் தொடக்கிவைக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.தமிழகத்திலும் மற்றும் உலக நாடுகளிலும் உள்ள தமிழறிஞ்ர்கள் அவரவரின்வட்டாரத் தமிழ்ப் பள்ளிகளில் தமிழ்மக்களை அழைத்து நம் அடுத்த தலைமுறைக்குதமிழ்மொழியில் திருக்குறளை அதன் பெருமைகளை சனிக்கிழமைகள் தோறும்தமிழ்மொழ்யில் பேசியும் எழுதியும் தமிழ்ப்பண்பாட்டைக் கற்பிக்க, உலகத்தமிழினம் ஒன்றுபடும் ஒன்றுபடுத்துவோம். `உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார்` உலகத்தமிழாசிரியர்களும் தமிழின அறிஞ்சர் பெருமக்களும் ஆளும் அரசுடன் இணைந்துநடைமுறைக்குக் கொண்டுவர தொடர்ந்து பாடுபட உலகத் தமிழர்கள்கடமைப்பட்டுள்ளோம்! தாய்மொழிதான் ஒரு இனத்தின் விழி என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருப்போம் ஜனவரி 18-2014 முதல் தொடர்ந்து வரும் ஒவ்வொருசனிக்கிழமைகள் தோறும் இறைவனை வணங்க ஒன்று கூடுவோம் தமிழ்மக்களே! உறுதிஎடுத்துக்கொள்ளுங்கள் நன்றி வணக்கம். வாழ்க உலகம் .

 

++++++++++++++++++++++++++++++++++++++

http://inbachudar.blogspot.in/2013/07/blog-post.html

inbachudar@hotmail.com

Advertisements

0009.2 வலைமச் சொற்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
TA

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
table.MsoTableGrid
{mso-style-name:”Table Grid”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-priority:59;
mso-style-unhide:no;
border:solid windowtext 1.0pt;
mso-border-alt:solid windowtext .5pt;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-border-insideh:.5pt solid windowtext;
mso-border-insidev:.5pt solid windowtext;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

வலைமச் சொற்கள்

இலக்குவனார் திருவள்ளுவன்

thiru2050@gmail.com

 

 

  கணிப்பொறி தொடர்பாகவும் பிறஅறிவியல் தொடர்பாகவும் மிகுதியான கலைச் சொற்கள் தமிழில் உருவாக்கப்பட வேண்டி உள்ளன. அறிவியல் கலைச்சொற்கள் அவ்வப்பொழுது சொல்லாக்க ஆர்வலர்களால்வெளிப்படுத்தப்படுகின்றன. மேலும் பல்லாயிரக்கணக்கான கலைச்சொற்கள் தேவை. இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட கலைச்சொற்களைக் கட்டுரையாளர்களும் நூலாசிரியர்களும் பயன்படுத்தினால்தான், இவற்றால் பயன் விளையும். இல்லையேல் விழலுக்கு இறைத்த நீர்தான்.   இனியேனும்படைப்பாளர்கள் தமிழ்க்கலைச் சொற்களையே பயன்படுத்தும் வேண்டுகோளுடன் கட்டுரையைத் தொடருகிறேன். கணிணிச் சொற்களில்  வலைப்பணி(Network) சார்ந்த கலைச் சொற்களைக் காணலாம்.

  கலைச்சொல்லாக்க நெறிமுறைகள் குறித்துக்,கணிணியியலில் நேர்பெயர்ப்புச் சொற்களும்ஒலிபெயர்ப்புச் சொற்களும் என்னும் (செருமனியி்ல் நடைபெற்றஇணையத் தமிழ் மாநாட்டுக்) கட்டுரையிலும் <http://thiru-padaippugal.blogspot.in/2010/06/1.html> ‘கணிணியியலில் தமிழ்ப் பயன்பாடுஎன்னும் (கோவையில் நடை பெற்ற இணையத் தமிழ் மாநாட்டுக்) கட்டுரையிலும்குறித்துள்ளேன். எனவே சுருக்கமாகச்சிலவற்றை மட்டும் குறிப்பிட விழைகிறேன்.

 

  கலைச்சொற்கள் என்ற பெயரில் அயற் சொற்களையும் அயல் எழுத்துகளையும் புகுத்துவது அடியோடு நிறுத்தப்பட வேண்டும். முன்னரே நடைமுறையில் உள்ள கலைச்சொற்களை அறிந்து, தக்கனவாய் இருப்பின், அவற்றையே பயன்படுத்த வேண்டும். ஒரே சொல்லிற்கு ஒவ்வொருவரும் புதுப்புதுச் சொற்களை அறிய முற்படுவது காலக்கேடும் பயன்கேடும் ஆகும். அதே நேரம்  பயன்பாட்டில் உள்ள சொற்கள் தவறாக அல்லது வேறு பயன்பாட்டில்இருப்பின், வேறு சொற்களை அறிய முற்படுவதே சரியானதாகும். கலைச்சொற்களைத் தொடர்களாக அமைக்கக்கூடாது; இவை சுருக்கமாகவும், செறிவாகவும், தெளிவான  பொருள் உடையனவாகவும், பொருள் மயக்கம் இல்லாதனவாகவும் இருத்தலே சிறப்பு. சுருக்கக் குறியீடுகள் அல்லது தலைப்பெழுத்துச் சொற்கள் தமிழிலேயே இருக்க வேண்டும். கலைச்சொற்களைப்பாடநூல்களிலும் பயன்படுத்த வேண்டும். இதன் அடிப்படையில் நாம் வலைமச் சொற்கள் குறித்துக் காண்போம்.

  வலைமச் சொற்கள் எனப் பார்க்கும் பொழுது கணிணி தொடர்பான பிற பிரிவுகளில் பலவும்  தொடர்புடையனவாக உள்ளமையைக் காணலாம். எனவே ஆயிரக்கணக்கில் உள்ள கலைச்சொற்கள் முழுமையையும் காணக் கால வரையறை இடம் தராது. எனவே, கால வரையறைக்கு உட்பட்ட எண்ணிக்கையில்  வலைமக்கலைச்சொற்களைக் காணலாம்.

 

அ.) வலைமம் (Network)

  வலைப்பணி என்பதற்கு மாற்றாகச் சிலர் பிணையம் எனக் கையாளுகின்றனர். பிணையம் என்பது ஒருவரை விடுவிப்பதற்கு அளிக்கப்படும் பிணை அல்லது காப்பினைக் (bail or security) குறிப்பதாக அமையும். பிணைக்கப்படுவது என்னும் பொருளில்  கையாள எண்ணினாலும் இத்துறையில் அச்சொல் பொருந்தாது. குறுக்கு நெடுக்குக்கட்டமைப்பு, கணிணிக்கட்டமைப்பு என்பன விளக்கமாக அமைந்தாலும் கலைச்சொல்லாக அமையவில்லை. நிகரம் என்பது,  நிகரத் தொகை என்பது போன்ற  இடங்களில் சரியாக இருக்கும். மருத்துவத்தில் பத்தியம் என்னும் பொருளிலும் இச்சொல் கையாளப்படுகிறது. சிலந்தி வலை, மீன் வலை முதலான இடங்களில்  உரியவாறு கையாளப்படுகிறது. இங்கே நாம் வேறு வலைகளில் இருந்து வேறுபடுத்துவதற்காக வலைப்பணியைச் சுருக்கமாக வலைமம் எனலாம். 

வலைமம் – Network

வலைமச் சொற்களில் சில வருமாறு : –

தே.வா.வா.ப.வலைமம்

நாசா என்பது  National Aeronautics and Space Administration  என்பதன் ஆங்கிலத்தலைப்பெழுத்துச் சொல்லாகும். தமிழில் தேசிய வானூர்தி- வான்வெளி பணியாட்சி  எனலாம். சுருக்கமாகத் தே.வா.வா.ப. எனலாம். ஆதலின்தே.வா.வா.ப.வலைமம்.

Nasa communications network (nascom)

முனைப்பு மின் வலைமம்

Active electric network

அகப்பரப்பு வலைமம்        /..

Local Area Network / LAN

அகல்பரப்பு வலைமம்/ அக..

Wide Area Network / WAN

அகலக்கற்றைவலைமம்

Broad band network

அழை  நிலை வலைமம்

Dial-up networking

இணக்கவலைமம்

Compromise network

இணை நோக்கு வலைமம்

Peer- to- peer network

இணைக் குறுக்கு வலைமம் ( H-வடிவ வலைமம்)

H network

இணைப்பிடை வலைமம்

Inter connected network

இணைப்பிலி வலைமப் பணி  ....

Connection less network service/ CLNS

இணைப்புசார் வலைமப் பணி / .சா...

Connection oriented network service/ CONS

இணைவு நீக்கு  வலைமம்

Decoupling network

இருபுற வலைமம்

Bilateral network

இருமுனைய வலைமம்

Two terminal network

இருமை வலைமம்

Dual network

ஈடுசெய் வலைமம்

Compensating network

உயர்மட்ட வலைமம்

High-level network

ஒத்தியக்க வலைமம்

Synchronous network

ஒப்புமை வலைமம்

Analog network

ஒருங்கு பணிகளின் எண்ம வலைமம்

Integrated services digital network (ISDN)

ஒருங்கு வலைமம்

Integral network

ஒருமுக வலைமம்

Linear network

கண்ணி வலைமம்

Mesh network

கணிணி வலைமம்

Computer networking

கல்வியிய வலைமம்

Academic network

கலப்பின வலைமம்

Hybrid network

கானகச் சூழலமைப்பு வலைமம்கா.சூ.

Forest ecosystem network-FEN

கிளைமை வலைமம்

Star network

சமனி வலைமம்

Bridgenetwork

சமனுறு வலைமம்

Balanced network

செயற்கைவலைமம்

Artificial network

ஞாலப்பரப்பு வலைமம்/ ஞாபவ

Global area network / GAN

ட வடிவ வலைமம்

L network

தகவல் வலைமம்

Information network

தகவல்தொடர்பு வலைமம்

Communication network

தன்னியக்க  எண்ம வலைமம்

Automatic digital network

தனிப்படுத்து வலைமம்

Isolation network

தனிப்பரப்பு வலைமம்/

...

Personal area network / PAN

திரள் மாறிலி வலைமம்

Lumped-constant network

திருத்து வலைமம்

Corrective network

நடுவண் வலைம அமைவம்

Centralized network configuration

நான்முனை மின்வலைமம்

Four terminal network

நுண்ணலைவலைமம்

Microwave network

பகிர்வு வலைமம்

Distributed network

பங்கிடு வலைமம்

Dividing network

படிநிலை வலைமம்

Hierarchical network

படிமுறை வலைமம்

Ladder network

பல்திவலை வலைமம்

Multi drop network

பல்துறை வலைமப் பகுப்பாய்வி

Multiport network analyzer

பல்பெருக்க அணுக்க வலைமம்

Multiple access network

பல்முறைமை வலைமம்

Multisystem network

பல்வகை வலைமம்

Heterogeneous network

பல்வரிசை வலைமம்

Multitier network

பிரிப்பு வலைமம்

Crossover network

பின்னல் வலைமம்

Lattice network

பின்னூட்ட வலைமம்

Feed back network

புறவெளிவலைமம்/ புவெவ

Deep-space network (DSN)

பெருநகர்ப்பரப்பு வலைமம்/ பெ...

Metro area network / MAN

பெரும வலைமம்

Maximum network

பொருத்து வலைமம்

Fixer network

மறுதலை வலைமம்

Inverse network

முக்கோண வலைமம்

Delta network

வலிகுன்று வலைமம்

Attenuation network

கிளைப்பி வலைமம்

Derivative network

வலு நீக்கு வலைமம்

Deemphasis network

வலைம ஒருங்கமைப்பு

Network organization

வலைம வரிவரை

Network diagram

வலைம அட்டை

Network card

வலைம இயக்க முறைமை

Network operating system

வலைமஇயக்கக் கட்டுப்பாட்டு மையம்...மை.

Network Operations Control Center (NOCC)

வலைம நிரல்படம்

Network chart

வலைம மாறிலி

Network constant

வலைம வரிப்படம்

Network diagram

வலைமக் கட்டுமானம்

Network architecture

வலைமச் சுற்றம்

Network neighborhood

வலைமப் பகுப்பாய்வு

Network analysis

வலைமப்பணியாட்சியர்

Network administrator

வளாகப் பரப்பு வலைமம்  / ...

Campus area network / CAN

விளம்பர வலைமம்

Advertising Network

 

 

ஆ.) பொதியம்(Packet)

பாக்கெட்டு(packet) என்பது தமிழில் இடத்திற்கேற்றவாறு, பொட்டலம், பொதி, பொட்டணம், சிப்பம், சிறுபொதியம் எனப்பலவாறாகக் குறிக்கப்படுகின்றது. இங்கே தரவுகளைப்  பொதிந்து வைப்பதைக் குறிப்பதால் பொதியம் எனலாம்.

பொதியம்Packet

பொதிய இழப்பும் மீளனுப்புகையும்Packet Loss And Retransmission

மீ விரைவு புவிஇணைப்பு பொதிய அணுக்கம்/ மீ.வி.பு.பொ.அ. –

High-Speed Downlink Packet Access / HSDPA

.) ஆவளி – Sequence

array, order, queue, row, tier, ordinal, sequence என எல்லாமே வரிசை என்றே குறிக்கப்படுகின்றன. எனவே, வேறு தனிச்சொல்லைக் குறிப்பதே பொருத்தமாக இருக்கும்.

 தீபங்கள் வரிசையாக அடுக்கப்படுவதைத் தீபாவளி என்றும் பட்டம்பெற்ற குருமாரின் தலைமுறை வரிசையைப் பட்டாவளி என்றும் வரிசை என்பதைக் குறிக்கும் ஆவளி என்னும் சொல்லை இணைத்துக்குறிக்கின்றனர்.எனவே, இந்த இடத்தில்வரிசை என்பதற்கு மாற்றாக ஆவளி எனக் குறிக்கலாம்.

பொதிய ஆவளி எண் – Packet Sequence Number

 

 

ஈ.) ஒற்றி(sniffing)

முகர்வு, மோப்பம்பிடித்தல் என sniffing என்பதைக் குறிப்பிடுகின்றர். இவ்வாறு நேர் பொருளில் குறிப்பதைவிடக் கணிணிக்குப் பொருத்தமான சொல்லைக் குறிப்பதே சிறப்பாகும்.அனைத்து விவரங்களையும் ஒற்றி எடுத்தல் என்னும் பொருளில் ஒற்றி எனலாம். மோப்பம் பிடிப்பதும் தடத்தை ஒற்றி அறியத்தானே!

ஒற்றி– Sniffing

பொதியஒற்றி – Packet Sniffing

உ.)ஓம்பி – host

ஃகோசுட் கம்ப்பியூட்டர்/ host computer என்பதற்கு விருந்துக் கணினி/ஏற்புக் கணினி எனத் தவறாகக் குறிக்கின்றனர். தருகணிணியை ஏற்புக் கணிணி என்பது தவறல்லவா? பிற அறிவியல் துறைகளில் ஃகோசுட்/host என்பதற்கு ஓம்புயிரி, ஓம்பி, விருந்து ஓம்புநர், புரவன், ஓம்புநன்,தருநர் என்கின்றனர். ஓம்பி என்பதையே பொதுச் சொல்லாக எடுத்துக் கொண்டு இத்துறையிலும் கையாளலாம். எனவே, ஓம்பிக்கணிணி (host computer) எனலாம்.

ஓம்பிக்கணிணி – host computer

ஊ.)கோரி (client ) 

கிளையண்ட்டு client என்பதற்கு வாடிக்கையாளர், கட்சிக்காரர் என்றெல்லாம் சொல்லப்படுகின்றன. இவற்றுக்கு முறையே customer, partyman   ஆகிய  சொற்கள் உள்ளன.  பொதுவாக ஒரு பணியை முடித்துத் தருமாறு கோருபவரே கிளையண்ட் எனப்படுகிறார்.  எனவே, கோருநர் என்பதே சரியாக இருக்கும். அஃறிணையில் கோரி எனல் வேண்டும்.

கோரி/கோருநர்client

வலைமக் கோரி- network client

எ.)விளம்பி(server)

  அதுபோல் server என்பதற்கு உயர்திணையில் விளம்புநர் என்றும் அஃறிணையில் விளம்பி என்றும் சொல்வது பொருத்தமாக அமையும். நான், பல ஆண்டுகளுக்கு முன்பு கணிணி மொழியை விளம்பி எனச் சொல்லாம் என எழுதியிருந்தேன்.  மனிதர்களால் மொழியப்படுவதுதான் மொழி எனவே, கணிணிக்கு இது பொருந்தாது எனக் கருதியிருந்தேன். ஆனால், கணிணி மொழி என்பது பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. ஆதலின் விளம்பி என்ற சொல் செர்வர்  என்பதற்கு மட்டும் பொருந்தும் எனக் கருதலாம்.

விளம்பி/ விளம்புநர் – server

கோரிவிளம்பி வலைமம்client – server network

ஏ.)நிரலி(protocol)

சீர் மரபு, செம்மை நடப்பு வழக்கு, செம்மை நடப்பொழுங்கு, செய்மை நடப்பொழுங்கு, நெறிமுறை, மரபு பேணுகை, மரபு முறை, மரபுச்சீர் முறைமை

என வெவ்வேறு வகையாக இப்பொழுது குறித்து வருகின்றனர்.

மின் குழுமம் ஒன்றில் பேரா. செல்வகுமார்,

‘’நெறிமுறை எதிர் விதிமுறை/ எதிர் வரைமுறை – protocol, எது சரி? இரண்டுமே சரியாக இருக்கும். தொடர்பாடல் துறையில், கணிணித் துறையில் இரண்டிலுமே இரு சொற்களும் பொருந்தும். இல்லை சுருக்கமாக நெறி என்றே சொல்லலாம். நெறி என்றால் ஒரு குறிப்பிட்ட திசை/முறைப்படி செல்லுதல்/நடத்தல். புரோட்டொக்கால் என்பது பணி அல்லது தொடர்பாடலுக்கான் நெறிமுறை. விதிமுறை என்பதும் அதுவே. நெறி என்ன என்றால் புரோட்டோக்கால் என்ன. வகுநெறி, தொடர்நெறி, தொடக்குநெறி என்று தேவைக்கும் இடத்துக்கும் ஏற்றால்போல செய்து கொள்ளலாம்  எனத் தெரிவித்து உள்ளார்.

career, norm, moral, principle,  என்பனவற்றிற்கெல்லாம் நெறி என்றே குறிக்கின்றனர். எனவே, நெறி என்பதும் நெறிமுறை என்பதும்  புரொட்டக்கால் என்பதற்குப் பயன்படுத்தும் பொழுது குழப்பம் வரும்.  ஆதலின் தக்க கலைச்சொல்லையே பயன்படுத்த வேண்டும்.

  நிரல் என்பதற்கு வரிசை, முறைப்படி ஒழுங்குபடுத்தல், வரிசைப்படுத்தல் எனப் பொருள்கள் உள்ளன.

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுநோக்கி வாழ்வார் பலர் (குறள் எண்: 528) என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். பாராட்டிற்கும் மதிப்பிற்கும் உரியவர்களைப் பொதுவாக நோக்காமல் தகுமுறைக்கேற்ப நோக்க வேண்டும் என்பதையே அவர் குறிப்பிடுகிறார். அதற்கு அவர் குறிப்பிடும்  சொல்லே வரிசை என்பதாகும்.  புரொட்டக்கால்/protocol  என்பதும்  வரிசை முறைப்படி அமைவதையே  குறிக்கிறது.  இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தகவல்தொடர்பிகளிடையே பரிமாறப்படுவது உரிய வரிசையமைப்பிற்கேற்ப நிகழ்வதைக் குறிக்கும் நெறிப்பாட்டை, வரிசைநெறி என்னும் பொருளிலான நிரல் நெறி எனலாம். நிரல் உடைய நெறி  என்பதால் சுருக்கமாக  நிரலி எனலாம்.

நிரலி  Protocol

 

வலைம நிரலி

Network protocol

ஓர்மி* ஒத்திசை நிரலி

Bit synchronous protocol

தகவல்தொடர்புநிரலி

Communications protocol

இணைப்புசார் நிரலி

Connection oriented protocol

கோப்பு மாற்று நிரலி

File transfer protocol

மீஉரை மாற்ற நிரலி

Hyper text transfer protocol (http)

இணைய நிரலி

Internet protocol

அடுக்கு நிரலி உத்தி

Layered-protocols technique

பல்தொகுப்பு முனைக்கு முனை நிரலி

Multilink point-to-point protocol

வலைம நிரலி

Network protocol

வலைமப் போக்குவரத்து நிரலி

Network transport protocol

முனைமுனை நிரலி

Point-to-point protocol

நிரலி உடன்படிக்கைகள்

Protocol agreements

நிரலித் தொடர்

Protocol sentence

நிரலி அடுக்கம்

Protocol stack

நிரலித் தொகுமம்

Protocol suite

நிரலிநிலைக் கடிகை

Protocol-level timer

பயனர் தரவுவரி நிரலி

User data gram protocol

 

(*binary digit என்பதன் சுருக்கம்தான் bit என்னும்பொழுது, மூலச்சொற்களை மறந்துவிட்டுச் சுருக்கச் சொல் அடிப்படையில் துண்டு என மொழி பெயர்த்தால் தவறான பொருள்தானே கிடைக்கும். சிலர் பிட்- சிறு துண்டு, பைட்-பெருந்துண்டு; மேலும் முறையே சிறுதி (சிறு துண்டு என்பதன் சுருக்கமாம்), பெருதி; துண்டம், எண் துண்டம்; விள்ளல், எட்டு விள்ளல்/அட்ட விள்ளல்; துணுக்கு, எட்டியல் என்றெல்லாம் குறிக்கின்றனர். அனைத்திற்கும் அடிப்படைக் காரணம் பிட்என்பதை ஒற்றைச் சொல்லாகக் கருதி மொழி பெயர்ப்பதே ஆகும். எனினும் 1,0 என்னும் இரண்டு எண்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இயங்குவதைக் குறிப்பதால் இருமை எண்கள், ஈரிலக்க எண்கள், இருநிலை எண்கள், இரட்டை எண்கள், ஈரடிமானம் என்று வெவ்வேறு வகையாக இச் சொல் விளக்கப்படுகிறது. எனவே சுருக்கமாக இருமம் என்று குறிப்பிடலாம். எனினும் binary என்பதன் பொருள்தான் இவ்விளக்கங்கள். பிட்ஓர் அலகு என்ற அளவில்தான் பயன்படுகிறது. இவ்வலகில் 0,1 ஆகிய ஈரெண்கள் இருந்தாலும் பயன்பாட்டில் ஏதேனும் ஒன்றைத்தான் குறிக்கும். எனவே, அளவீடாகிய அலகைக் குறிக்கையில் இருமம்என்பது தவறாகிறது. எனவே, ஓர் அலகு என்னும் நடைமுறைக் கிணங்க, ‘ஓர்மம்’ > ‘ஓர்மிஎன்று சொல்லலாம். அப்படியானால் பொருள் மாறுபடாதா என்றால் சொல் இடத்திற்கேற்ற பொருளைத்தானே பெற வேண்டும். எடுத்துக்காட்டாக ‘back’ என்றால் பின்எனப் பொருள். backside – பின்பக்கம்; ஆனால், back file – முன் கோப்பு என இடத்திற்கேற்ற பொருளைப் பெறுகிறது. அதுபோல்தான் பைனரிஎன்னும் பொழுது இருமத்தைக் குறிக்கும் சொல் பைனரி யூனிட் என்னும் பொழுது ஓர்மி ஆகிறது. இல்லாவிடில் பிட்என்பதை இருமம் என்றால் அதன் எண்மடங்காகிய பைட்என்பது எண்ணிரண்டு பதினாறு என்றாகும். எனவே, தவறான பொருள் உண்டாகும். மாறாக, எட்டு ஓர்மி’ (பிட்) சேர்ந்த பைட்என்பதை எண்மம்’> ‘எண்மிஎன்று சொல்லலாம். Bit – ஓர்மி; Byte – எண்மி எனச் சுருக்கமாகவே குறிப்பிடலாம். இவற்றின் அடிப்படையில் பிற அளவைகளையும் காணலாம். (கணிணியியலில் நேர்பெயர்ப்புச் சொற்களும் ஒலிபெயர்ப்புச் சொற்களும் : இலக்குவனார் திருவள்ளுவன் <http://thiru-padaippugal.blogspot.in/2010/06/2.html&gt;)

ஐ.)இலி /இன்மை(null)

நல்(null)  என்றால் வெறுமை அல்லது ஏதுமற்ற என்று பொருள்.  நல் என்னும் தமிழ்ச்சொலிலிற்கு நல்ல என்று பொருள்.  ஆனால், ஆங்கிலச் சொல்லையே பயன்படுத்தினால் நல்ல என்னும்  பொருந்தாப் பொருள் அல்லவா தோன்றும்.

நல் என்று தமிழ்வரிவடிவிலேயே பயன்படுத்திவிட்டு நல் என்றால் நல்ல அல்ல என்று சொல்வதால் பயனில்லை. அந்த இடத்தில் வேண்டுமென்றால் அதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் கலைச் சொற்களைப் பயன்படுத்தும் இடங்களில் படிப்போர் தவறாகவே எண்ணுவர். எனவே, நல்மோடம் எனத் தமிழில் பெயர்த்து எழுதுவதைவிடத் தமிழ்க்கலைச்சொல்லையே பயன்படுத்த வேண்டும்.

மோடம் (Modem – Modulation/Demodulation) என்பதுதரவை மாற்றித் தரும் கருவி; அஃதாவது, கணிணியில் இருந்து தொலைபேசிக் கம்பிகள் வழியாக அனுப்புவதற்காக அல்லது தொலைபேசிக் கம்பியில் இருந்து கணிணிக்கு வந்துசேருவதற்காகத் தரவினை மாற்றித் தரும் கருவி; ‘தருவியின்றி இரு கணிணிகளை வடம் (கேபிள்) வழி  இணைப்பதும் உண்டு. இவ்வடமே  தருவியிலி  (null modem)  எனப்படுகிறது.

இலி– null ;

தருவியிலி – null modem

தருவிச்சொற்கள் சில :

மாறு நிலை தருவி(சமச்சீரற்ற என்பதைவிட மாறுபட்ட  வேகங்களை உடையதால் மாறுநிலை என்பது சரியாக அமையும்.)

 

 

Asymmetrical modem

தொலைவு வரம்பு தருவி

Limited-distance modem

நேரிணை தருவி

Direct connect modem

ஒருங்கிணை   தருவி

Integral modem

தொலைபேசித் தருவி

Telephone modem

குரல் தகைவு தருவி

Voice-capable modem

குரல் உணர்    தருவி

Voice recognition modem

அகநிலை தருவி

Internal modem

அழை  நிலை தருவி

Dial-up modem

வட நிலை தருவி

Cable modem

தொடர்முறை தருவி

Analog modem

 

ஒலிக்குறிப்பு தருவி

Acoustic modem

 

ஒ.)விசைப்பி – switch

ஆளி, இணைப்பி, இணைப்புமாற்றி, சுற்றிணை, சொடுக்கி, தாவி, திறப்பான், திறப்பி, தூண்டுவிசை, தொடர் மாற்றி, தொடு சாவி, நிலைமாற்றம், நிலைமாற்றி, பாதைமாற்றி, மடை, மின் பொருத்தி, மின்விசை மாற்றுக்குமிழ், விசை இயக்கி, விசை,

என சுவிட்சு/switch என்பதற்கு ஒவ்வொரு துறையில் ஒவ்வொரு வகையாகக் கையாளுகின்றனர்.பயன்முறை அடிப்படையில் பெரும்பாலும் சரியாக இருந்தாலும் பொருள் மயக்கம் தரும் சொற்களைப் பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொரு சொல்லும் சரியான பொருளை வெளிப்படுத்தவில்லை என ஒரு சாரார் கருதுவதாலேயே புதுப்புதுச் சொற்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்துகின்றன.

விசை என்னும் சொல், கீ/key என்னும் பொருளில் பரவலாகக்   கையாளப்படுவதால், இதற்குப் பொருந்தாது. எனினும் விசை அடிப்படையில், விசைப்பி எனலாம்.விசைப்பு என்பதை switching  எனலாம்.

விசைப்பி– switch

தன்னியக்க வலைம விசைப்பி Automatic network switching

ஓ.)சீர்மம் (ideal)

இலக்கியலான, இலட்சியம், உயர் குறிக்கோள், உயர்வான, எடுத்துக்காட்டாக விளங்குவது, கற்பனைச் சார்பான, குறிக்கோள் நிலை, குறிக்கோள் வடிவான, கனனவியலான, குறிக்கோள், குறைவிலா நிறைசெப்பம், சால்பு சீர்மை, செயல்துறை சாராத, நிலையான, கருத்தியலான,  புனைவியலான, பொ௫த்தமான, முழுநிறைநலம், முன்மாதிரி,

என ஐடியல்/ ideal என்பதற்கு வெவ்வேறு சொற்கள் கையாளப்படுகின்றன.

சீர்மை அடிப்படையில் சீர்மம் எனக் குறித்து சீர்ம வலைமம் எனலாம்.

சீர்மம்ideal

சீர்ம வலைமம் – ideal network

இவ்வாறு வலைமச் சொற்களைத் தமிழில் எண்ணித்தமிழிலேயே வெளிப்படுத்தலாம். முதலில் குறிப்பிட்டவாறு காலச்சுருக்கத்தால்  சில மட்டுமே பார்த்துள்ளோம். எனினும் அனைத்துக் கலைச் சொற்களையும் தமிழில் பயன்படுத்தலாம்.ஆனால், நடைமுறையில் கணிணிநூல்களிலும் கட்டுரைகளிலும் தமிழ்வரிவடிவில் ஆங்கிலமே பரவலாகப்பயன்படுத்தப்படுகின்றது.

  தமிழ்க்கலைச் சொற்களை உருவாக்குவதிலும் பயன்படுத்துவதிலும் ஆர்வம் மிக்கவர்களே, அவற்றைப் பயன்படுத்தாமை அல்லது  புதிய கலைச்சொற்களைத் தேடுவதில் நாட்டம் காட்டாமை போன்றவற்றால் இவ்வாறு, ஆங்கிலக் கலைச் சொற்களைத் தமிழ் எழுத்து வடிவில் பயன்படுத்தும் அவலத்தை அரங்கேற்றுகின்றனர்.  சான்றாகச்  சொல்ல வேண்டுமெனில் வலைமம் குறித்து 960 பக்கத்தில் நெட்வொர்க் தொழில்நுட்பம் என்னும் நூலை எழுதி உள்ள நூலாசிரியர், பலரின் தமிழார்வத்திற்கு உந்துதலாக உள்ளவர்.

ஆனால், இந்நூலைத்தமிழ் நூல் என்று கூறுவதற்கு இயலவில்லை. அருவினை ஆற்றும் ஆர்வத்தில் பெருமுயற்சி மேற்கொண்டு நூலை உருவாக்கி உள்ளார் ஆசிரியர். ஆனால்,   அருவினை அருந்தமிழ்க்கொலை புரிய அல்லவா  துணை நின்றுள்ளது.மார்னிங் எய்ட் ஓ கிளாக் பிரேக்  ஃபாசுட் முடித்துவிட்டு நைன் ஏஎம் வண்டியில் ஆஃபீசுக்குப்  புறப்பட்டு டென் ஏஎம்  போய்ச்  சேர்ந்தேன் என்று அன்றாடம் மொழிக் கொலை புரிவதற்கும் முழுக்க முழுக்க ஆங்கிலக் கலைச் சொற்களையே பயன்படுத்தி நூலை எழுதுவதற்கும் வேறுபாடு இல்லை. இவ்வாறு எழுதுவது மொழிக் கொலை மட்டுமல்ல அறிவுக் கொலையுமாகும்.ஆங்கிலத்தில் கணிணியியல் படித்தவர்கள் தமிழறிந்தவர்களாக இருப்பின் அவர்களுக்கு இந்நூல் எளிமையாக அமையலாம். ஆனால் முதலிலேயே தமிழில் படிப்பவர்களுக்கு ஆங்கிலக்கலைச்சொற்களை முழுக்க முழுக்கப்பயன்படுத்தி எழுதி உள்ளமையால், இந்நூல் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும். உளவியல் அடிப்படையில் இது சரியானதல்ல. சொல்லை அறிமுகப்படுத்தும்பொழுதே தமிழில் அறிமுகப்படுத்தினால் எளிதில் புரியும். ஆதலின் தமிழ்க்கலைச் சொற்களைப் பயன்படுத்தி மறுபதிப்பு வெளியிடுவது ஆசிரியருக்கும்பெருமை சேர்க்கும்; படிப்போர்க்கும் பயன்பெருக்கும்; தமிழுக்கும் வளமை நல்கும்.

இவ்வாறே அனைத்துப் படைப்பாளர்களும் நல்ல தமிழிலேயே எழுத வேண்டும். தெரியாச் சொல்லிற்கான உரிய சொல்லை அறிவதில் சோம்பல், முயற்சியின்மை, நாட்டமின்மை போன்றவற்றால் தமிழுக்குக் கேடு செய்வதைப் படைப்பாளிகள் உணர வேண்டும்.  இத்துறையாயினும் வேறு எத்துறையாயினும், பாடநூல்களும் தமிழ்க்கலைச் சொற்களைப் பயன்படுத்தியே உருவாக்கப்பட வேண்டும்.

அறிவியல், தமிழ்வழி  இருப்பின் அறிவியலும்  வளர்ந்தோங்கும்! தமிழும் சிறந்தோங்கும்!

பார்வையில் பட்டவை :

1. Computer Dictionaryகணிப்பொறி அகராதி  (English – Tamil)  இராம்குமார் ; திருநெல்வேலி தெ.சை.சி.நூ.கழகம்

2. மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி – மணவை முசுதபா ; மணவை வெளியீடு

3.நெட்வொர்க் தொழில்நுட்பம் – மு.சிவலிங்கம் :பாரதி பகத் பதிப்பகம்

4. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேரகராதி

5. தமிழ்இணையக்கல்விக்கழகத்தின் கலைச்சொற்கள் தொகுப்பு

6. ஐரோப்பிய அகராதி (http://eudict.com/)

7. தமிழ் கியூபு அகராதி (http://tamilcube.com/)

0009.1 தமிழ் இன்றும் என்றும்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
TA

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
text-align:justify;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;
mso-bidi-language:AR-SA;}

Normal
0

false
false
false

EN-US
X-NONE
TA

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
text-align:justify;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;
mso-bidi-language:AR-SA;}

தமிழ் இன்றும் என்றும்

 

 

 

தமிழ் மொழி தமிழ்நாட்டின் அனைத்து நிலைகளிலும் நிலைத்து நிற்கும் மொழியாக இருக்க வேண்டுமென்பது நம் இன்றைய கனவு மட்டும் அல்ல; பல நூற்றாண்டுக் கனவாகும். ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் ஊடக மொழியாகவும் வேலைவாய்ப்பு மொழியாகவும் வணிக மொழியாகவும் என எல்லா இடங்களிலும் தமிழே இருக்க வேண்டும் எனத் தமிழ் அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் மட்டுமல்ல, அரசியல்வாதிகளும் பேசியும் எழுதியும் வருகின்றனர். ஆனால், இத்தகைய நிலையை எட்டும் காலம் – இன்றைய சூழலில் எதுவும் மாற்றம் இல்லை எனில் – வெகுதொலைவில்கூட இல்லை என்பதுவே உண்மை. இன்றைய இழிநிலை மாறி என்றும் தமிழ் உளதாகும் நிலை எய்த என்ன செய்ய வேண்டும்?

 

            ஆட்சி சட்டம் நடைமுறையில் உள்ளது; தமிழில் கையொப்பம் இடாவிட்டால் தண்டனை; தமிழில் எழுதாவிட்டால் தண்டனை என்றெல்லாம் அறிவிப்புகள் வருகின்றனவே என்கிறீர்களா? இத்தகைய அறிவிப்புகள்தாம் அவ்வப்பொழுது செய்திகளாக வரும். ஆனால் தமிழ்ப் பயன்பாடு என்பது பெயரளவிற்குத்தான் இருக்கும். வேறு என்னதான் செய்ய வேண்டும் எனக் கேட்கிறீர்களா? உண்மையிலேயே தமிழை ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என எண்ணினால் உயர் அதிகாரிகளுக்கே என்ன செய்ய வேண்டும் எனத் தெரியும். இனிமேல், தமிழில் இருக்கக் கூடிய ஆணைகள், ஒப்பந்தங்கள், ஆவணங்கள், குறிப்புகள், கோப்புகள், படிவங்கள், விண்ணப்பங்கள், தீர்ப்புகள், பட்டியல்கள், கையொப்பங்கள், முத்திரைகள், முகவரிகள் முதலான அனைத்துமே செல்லத்தக்கன என ஆணையிட்டால் போதுமே. மேலும், தமிழ் என்பது பிறமொழிக் கலப்பற்றுத் தமிழில் எழுதுவதுதான் என்றும் அறிவித்தால் போதுமே. தெரியவாதவர்களும் தெரிவதற்குரிய வழிவகைகளை மேற்கொண்டு விடுவார்களேஇன்றோஎனில்எல்லாவற்றிற்கும்ஏதோஒருவிதிவிலக்குஇருக்கும். அதனையே பற்றுக்கோடாகக் கொண்டு தமிழை விலக்கி வைக்கும் நடைமுறைதானே உள்ளது. மேலும் ஆட்சிமொழி என்பது ஆட்சிப்பணியைப் பார்க்கும் அரசு ஊழியர்களுக்கு மட்டும்தானா? பொதுமக்களுக்கு இல்லையா? இவ்வாறு தமிழில் இருப்பன மட்டுமே செல்லத்தக்கன என நடைமுறைப்படுத்தினால்தானே, எல்லா நிலைகளிலும் பொதுமக்களாலும் தமிழ் முழுமையாகப் பயன்படுத்தப்படும். அப்பொழுதுதானே ஆட்சிமொழி என்பதற்குப் பொருள் இருக்கும்.

 

            பள்ளிகளில் மொழிப்பாடமாகத் தமிழைக்கட்டாயமாக ஆக்கிவிட்டாயிற்றே! இனி செய்ய வேண்டியது என்ன உள்ளது என்கிறீர்களா? ஆண்டிற்கு ஒரு வகுப்பு என்ற முறையில் பத்தாண்டுகளுக்கு இத்திட்டத்தை ஒத்திப் போடுவதில் இருந்தே செயல்படுத்துவோரின் ஈடுபாடின்மை நன்கு புரிகின்றதே. இக்கல்வியாண்டு வீணானது போதும். உச்ச நீதிமன்றத்தைக் காப்பாகக் கொண்டு, 2008-2009 கல்வியாண்டு முதல் எல்லாப் பாடநிலைகளிலும் தமிழ் மொழிப் பாடம் என்பதைத் தவிர்க்க இயலாப் பாடமாக மாற்ற வேண்டும். இக்கோடை விடுமுறையில் வரும் கல்வியாண்டில் தமிழ் படிப்பதை எளிமையாக்கும் வகையில் தமிழ்ச் சான்றிதழ் வகுப்புகள் நடத்த வேண்டும். அது மட்டுமல்ல தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல் முதலான தொழில் படிப்பு பயில வருவோரும் தமிழை அறியச் செய்ய வேண்டும். எவ்வாறு பிற நாடுகளில் அந்நாட்டு மொழிகளில் தேர்வு நடத்துகிறார்களோ, அதே மாதிரித் தமிழ்நாட்டிலும் தமிழ் மொழித் தேர்வு நடத்தப்படவேண்டும்.

 

            தமிழ்ப் பயிற்று மொழி என்பதும் எல்லா வகைக் கல்வியிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பிற மொழி பேசுவோர் தமிழ்நாட்டில் பயில விரும்பினால், எவ்வாறு அவர்கள் பிற நாடுகளுக்குச் சென்று படிக்க விரும்பினால், முதலில் அந்நாட்டு மொழியைக் கற்றுக் கொண்டு அதன்பின் அந்நாட்டு மொழியில் கற்க இயலுமோ அதுபோல், தமிழ்நாட்டின்  தமிழை முதலில் கற்றுக்கொண்டு அதன்பின்பு விரும்பும் படிப்பைத் தொடரும் வகையில் நடைமுறைப் படுத்த வேண்டும்.

 

            தத்தம் மொழியைப் பயில  உரிமை உண்டு என்றும் இந்திய நாடு என்னும் போர்வையிலும் யாரும் எதிர்ப்பு தெரிவிப்பின், அவர்களை மக்கள் இல்லாப் பகுதிக்கு அனுப்பி அவர்கள் விருப்பம் போல் படிக்கச் சொல்ல வேண்டும்.

            ஏக இந்தியா என்று எந்தமிழை மாய்க்க வந்தால்

             சாக இந்தியா என்று சாற்றிடுவோம்

என்னும் பாவேந்தரின் முழக்கத்திற்குத் தேவையில்லாத சூழலை உருவாக்கி வலிவான பொலிவான இந்தியத் துணைக்கண்டத்தை உருவாக்க வேண்டும் எனில், தமிழே தமிழ்நாட்டின் கல்வி மொழி என்பதை நடுவணரசிற்கும் நாம் உணர்த்த வேண்டும்.

 

            எல்லாக் கோயில்களிலும் தமிழிலும் அருச்சனை செய்யலாம் என இருந்து, இப்பொழுது தமிழில் அருச்சனை செய்யப்படும் என அறிவிப்பு உள்ளதும் சிதம்பரம் கோயிலில் தேவாரம் பாடலாம் என்பது நடைமுறைக்கு வந்தபின்பும் தமிழ் வழிபாட்டைப்பற்றிப் பெருமை கொள்ளாமல் இருக்கலாமா எனச் சிலர் எண்ணலாம். சிதம்பரம் கோயிலில் ஆரியவழிபாடு முடிந்தபின்பு வெளி மேடையில் சிறிது நேரம் தேவாரம் பாடத்தான் இசைவே அன்றி, தெய்வப் படிமம் உள்ள கருவறையில் தேவாரம் பாட இயலாது. மேலும், தமிழ்நாட்டில் தமிழர்களால் கட்டப்பெற்ற தமிழ்க் கோயில்களில் தமிழ்க் கடவுள்களுக்குத் தமிழில் வழிபாடு நடத்துவதற்கு அறிவிப்பு தேவைதானா? அறிவிப்பு எதுவும் இல்லாமலேயே தமிழில் மட்டும்தான் வழிபாடு நடத்தப்படவேண்டும். எழுத்து மூலமான வேண்டுகோளின் அடிப்படையிலேயே பிற மொழி வழிபாட்டிற்கு இசைவு வழங்கப்பட வேண்டும். சமய உரிமை அல்லது ஆகம வழிபாட்டுமுறை என்ற பெயரில் எதிர்ப்பு தெரிவிப்பது தமிழர்களின் இறைவழிபாட்டு உரிமைக்கு எதிரானது எனச் சட்டம் கொண்டு வந்து அத்தகையோரின் அடாவடிப் போக்குகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

 

            திரைப்படங்களோ, தொலைக்காட்சிகளோ, இதழ்களோ எவையாயினும் பெரும்பாலும் தமிழ்க்கொலையில் முதலிடம் பெறுகின்றன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. நெருக்கடி நிலைக் காலத்தில் திரு என வரவேண்டிய இடங்களில் சிறீ என மாற்றிய தணிக்கையை ஏற்றுக் கொண்ட நாம், இப்பொழுது தமிழ்க்காப்பிற்கெனத் தணிக்கையை அறிமுகப்படுத்தினால்தான் நம் பிறநிலைகளில் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளும் வெற்றி காணும் என்பதை உணர வேண்டும். பிறமொழிக் கலப்பின்றித் தமிழைத் தமிழாகப் பயன்படுத்தினால் மட்டுமே, அரசு விளம்பரங்களும் நல்கைகளும் கடன் உதவிகளும் விருதுகளும் வழங்கப்பெற வேண்டும். தமிழோசையும் மக்கள் தொலைக் காட்சியும் இம்முயற்சிகளில் வெற்றி கண்டு வரும் பொழுது, தினமணியின் ஒரு பகுதி நல்ல தமிழில் செய்திகளைத் தந்து வெற்றி ஈட்டிக் கொண்டிருக்கும்  பொழுது சிற்றிதழ்கள் பலவும் இலக்கிய இதழ்கள் பலவும் நல்ல தமிழில் வந்து கொண்டிருக்கும் பொழுது பிறவற்றால் ஏன் இயலாது? தமிழ், தமிழ் என முழங்கும் எல்லாக் கட்சிகளும் தத்தம் கட்சி இதழ்களைத் தமிழில் நடத்தியும் தமிழில் உள்ள தமிழ் இதழ்களை மட்டுமே வாங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாலே போதுமே. அஃதாவது, பிற மொழி இதழ்களைப் படிக்கத் தடையில்லை. ஆனால் தமிழில் வரக் கூடிய இதழ்கள் எனில் உண்மையிலேயே பிழையற்ற நல்ல தமிழில் வந்தால் மட்டுமே படிக்க வேண்டும், பார்க்க வேண்டும் என அடையாளம் காட்டி அறிவுறுத்தினால் போதுமே! பண்பாட்டுச் சீர்குலைவான படைப்புகளைத் தணிக்கையின் மூலம் தடுத்தால், நாடகங்கள், படங்கள், தொகுப்பு நிகழ்ச்சிகள்மூ­லம் நடைபெறும் மொழிக் கொலைகளைத் தடுக்க இயலுமே!

 

            வணிக நிறுவனங்களுக்கு உரிமம் கொடுக்கும் பொழுதே, நல்ல தமிழில் பெயர் இருந்தால் மட்டும் ஏற்பு அளிப்பின், இயல்பாகவே விளம்பரப் பலகைகளில் தமிழைக் காண இயலுமே! பொதியப் பட்ட எப்பொருளாயினும் அதன் உறைகளில் தமிழைக் காணலாமே! அவ்வாறாயின் இயல்பாவே மக்கள் நாவில் நற்றமிழ் நடமாடுமே!

 

            இவ்வாறு கூறுவதெல்லாம் புதிய திட்டங்கள் அல்ல. பல நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவனதாம். நம் நாட்டிலும் காலங்காலமாக வலியுறுத்தி வரப்படுவனவே!

 

            எனவே, தமிழ் என்றும் நம் நாட்டின் எல்லா நிலைகளிலும் செயற்பாட்டு மொழியாகவும் பயன்பாட்டு மொழியாகவும் திகழ இன்றைய நிலையில் துணிந்து மேற்குறித்தவாறான நடவடிக்கைகளை எடுத்தால்தான் இயலும்.  இல்லையேல், இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இதே போல்  இன்றும் தமிழ்! என்றும் தமிழ்! என்னும் வெற்று ஆரவார முழக்கம் மட்டுமே மேலாங்கியிருக்கும்.

என்றென்றும் தமிழை வாழவைக்க

இன்றேனும் கலையட்டும் தூக்கம் !

 

0007.1 மூவர் விடுதலை முடியாத ஒன்றா?

v\:* {behavior:url(#default#VML);}
o\:* {behavior:url(#default#VML);}
w\:* {behavior:url(#default#VML);}
.shape {behavior:url(#default#VML);}

Normal
0

false
false
false

EN-US
X-NONE
TA

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;
mso-bidi-language:AR-SA;}

 

மூவர் விடுதலை முடியாத ஒன்றா?

இலக்குவனார் திருவள்ளுவன்

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் ஒரு புறம் தூக்குக் கயிறும் மறுபுறம் விடுதலைநம்பிக்கையுமாக உள்ளனர்.  இம்மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே உலகத்தமிழர்களின் வேண்டுகோளும் மனித நேயர்களின் மன்றாடலும் ஆகும். இருப்பினும் மனக்காய்ச்சலுடன் மாறுபட்ட கருத்துகளும் சொல்லப்படுகின்றன. எதிர்ப்புக் கருததாளர்கள், கொலையுண்டவரின் கட்சித்தலைமைக்கு வேண்டியவர்களாகக் காட்டிக் கொள்ள அல்லது அக்கட்சியுடன் நெருக்கமாக உறவு  இருப்பதாகக் காட்டிக் கொள்ள விரும்புகின்ற அல்லது தமிழினப்பகை உணர்வில் ஊறிப் போயுள்ளவர்களாக உள்ளார்கள். விடுதலை வேண்டுபவர்கள் இன உணர்வினால் நீதி மறுக்கப்படுவதற்கு எதிரானவர்களாக அல்லது மனிதநேய ஆர்வலர்களாக அல்லது நீதித்துறையில் மரணத்தண்டனைக்கு எதிராகச் செயல்படுபவர்களாக அல்லது அப்பாவிகள் காப்பாற்றப்பட வேண்டு்ம் என்ற உணர்வினால உந்தப்படுபவர்களாக உள்ளனர்.

இதனை ஒருதலைச் சார்பாகவோ உணர்ச்சி வயப்பட்டோ முடிவெடுக்காமல் பல நோக்கில் ஆராய வேண்டும். மரணத்தண்டனை முதலான தண்டனை பெற்றவர்களை மன்னிக்கும் மரபு, சட்டக்கூறுகள், அடிப்படை உரிமை, வழக்காறுகள், முன் எடுத்துக்காட்டுகள், ஆகியவற்றின் அடிப்படையில் நாம் பார்ப்போம்.

எல்லா நாடுகளிலுமே தொன்றுதொட்டே ஆட்சியாளரின் பிறந்தநாள் முதலான சிறப்பு நாள்களை முன்னிட்டுக் கொலைக்குற்றவாளிகளையும் பிற குற்றவாளிகளையும் மன்னிக்கும் வழக்கமும் இருந்துள்ளது. சட்டத்தின் நோக்கம் தண்டித்துப் பழிவாங்குவதன்று; மன்னித்துத் திருத்துவது என்னும் அறவோர்களின் செல்வாக்கால் ஏற்பட்ட நடைமுறையே இது. தமிழ் இலக்கியமான மணிமேகலையிலும் சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றியது போல்  மரணத்தண்டனைக்  குற்றவாளிகளை மன்னித்தது பற்றிய குறிப்பும் உள்ளது. எனவே, இம்மரபின்படி வருகின்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இம்மூவரையும் தூக்குத்தண்டனையை எதிர்நோக்கித் தனிமைச்சிறையில் அல்லலுறும் பிறரையும்தமிழக அரசு விடுவிக்கலாம்.

மரபு மன்னிக்கலாம்; சட்டம் மன்னிக்குமா என்ற கேள்வி எழலாம். ஆளுநரோ குடியரசுத்தலைவரோ நீதி மன்றம் தண்டனை அளிக்கும் முன்னரோ அளித்த பின்னரோ குற்றவாளிகளை மன்னிக்கலாம்; தண்டனைகளைக் குறைக்கலாம்; மாற்றலாம்; நீக்கலாம்  என இந்திய அரசியல் அமைப்புச் சட்டமே வழி வகுத்துள்ளது. இந்திய அரசியலமைப்புச்சட்டப்பிரிவு 72  குடியரசுத்தலைவருக்கும் இ.அ.ச.பிரிவு 161  மாநில  ஆளுநர்களுக்கும் இத்தகைய அதிகாரங்களை வழங்கி உள்ளது.

இந்திய அரசியல் அமைப்புச்சட்டப் பிரிவு 21, சட்டததின்படியானகடமையைத்தவிரயாரும் யாருடைய உயிரையோ தன்னுரிமையையோ பறிக்கக்கூடாது என்பதை வலியுறுத்துகிறது. இச்சட்டப்பிரிவு மரணத்தண்டனையை எதிர்நோக்கி யுள்ளவர்களுக்கும் பொருந்துமா எனப்பார்க்க வேண்டும். அரசமைப்புச் சட்டத்திற்கு நீதிபதிகள்தரும் விளக்கமும் அரசியலமைப்புச் சட்டக்கூறுகளாகவே கருதப்பட வேண்டும். அதன்படிப் பார்த்தால் இச்சட்டப்பிரிவு பற்றிய விளக்கமாக நீதிபதி பகவதி முதலான பலரும் மரணத்தண்டனையை எதிர்நோக்கி உள்ளவர்களுக்கும் இவ்வடிப்படை உரிமை பொருந்தும் என்பதை வலியுறுத்தி உள்ளனர். சிறைச் சுவர்களையும் தாண்டி அடிப்படை உரிமை சிறைவாசிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் விளக்கி உள்ளனர்.

சட்டப்படி ஒருவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டாலும் அதனை நிறைவேற்றுவது தொடர்பான நடைமுறைக் காலத்தாழ்ச்சி முதலான அடிப்படையில் அவருக்கு ஊறு நேர்ந்தால் அவர் இவ்வரசியலமைப்புச்சட்டப்படி உரிமை கோருவதற்கு உரியவர் என்றும் விளக்கி உள்ளனர். தூக்குத் தண்டனை என்பது  நிறைவேற்றப்படும் பொழுது மட்டும் உடலுக்கு ஏற்படும் ஊறு. ஆனால், மரணத்தண்டனையை எதிர்நோக்கித்தனிமைச் சிறையில் அடைபட்டுக்கிடப்பது உள்ளத்திற்கும் அளிக்கப்படும் கடுந்தண்டனையாகும். எனவே, இத்தகையோருக்கு அரசமைப்புச்சட்டப்பிரிவு 21 இன்கீழ் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே நீதிபதிகளின் கருத்தாகும். எனவே, இப்பிரிவின்படியான சட்டப்பாதுகாப்பும் நீதியும் மூவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே முறையாகும்.

அடுத்து வழக்காறுகளும் முன்எடுத்துக்காட்டுகளும் தூக்குத்தண்டனையை  மாற்றிக் குறைக்கும் வகையில் உள்ளனவா எனப் பார்ப்போம்.

ஒரிசா மாநிலத்தில் கபிராசு பிரதான் என்பவருக்குக் கொடூரமான கொலைக் குற்றத்திற்காக மாவட்ட  நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்தது. இதனை உறுதிப்படுத்துவதற்காக இவ்வழக்கு உயர்நீதிமன்றத்திற்குச் சென்றது. கொலையாளி மேல்முறையீடு செய்யாத பொழுதும் உயர்நீதிமன்றம் தூக்குத்தண்டனைக்கு எதிரான முடிவை எடுத்து  வாழ்நாள் தண்டனையாக மாற்றியது. நீதிபதிகள் பிரதீப் மொகந்தி, பி.கே. படேல் ஆகியோர் இத்தீர்ப்பைக் கடந்த வாரம் வழங்கி உள்ளனர். எனவே, பொதுவாக நீதிபதிகள் எல்லாம் தூக்குத்தண்டனைக்கு எதிரான அறவுணர்வாளர்களாக  உள்ளனர் எனலாம்.

வைத்தீசுவரன் வழக்கில், அப்பாவி வணிகர்களை ஏமாற்றி நஞ்சு செலுத்திக் கொன்றிருந்த பொழுதும். 2 ஆண்டுகள் தனிமைச்சிறையில் இருந்ததைக் காரணம் காட்டி – காலத்தாழ்ச்சிக்குக் காரணம்  குற்றவாளியாக இருந்தாலும் பொருட்படுத்தக்கூடாது எனக்கூறிஅடிப்படைச்சட்டப்பிரிவு 21 மீறப்படுவதாகக்  குறிப்பிட்டு  அவரின் தூக்குத் தண்டனை  வாழ்நாள் தண்டனையாக மாற்றப்பட்டது. தூக்குத்தண்டனையை வாழ்நாள் தண்டனையாக மாற்றிய பின்னர்  அவன் விடுதலை பெற்றான். இவ்வழக்கில், நீதிபதி சின்னப்ப(ரெட்டி) அவர்கள், கொலையாளிக்குக் காட்டப்படும் கருணை கொலையுண்டவர் குடும்பத்தினருக்கு எதிரானது எனக் கேள்வி எழுப்புவோருக்கு, அவ்வாறு கேட்பது  சைலாக்கு  1 பவுண்டு சதை கேட்பதுபோல் ஆகும் எனத்  தெரிவித்து உள்ளார். (சைலாக்கு என்பது சேக்சுபியரின் வெனீசு வணிகர் (The Merchant of Venice) என்னும் நாடகத்தில் வரும் ஒரு கதைப்பாத்திரம். அதிக வட்டிக்குக் கடன்கொடுத்துப் பிறரைத் துன்புறுத்துபவன் சைலாக். அவன் வட்டியின்றிக் கடன் கொடுத்து வரும் அந்தோனியாவால்  தன்   பிழைப்பு கெடுவதாக எண்ணி அவனை ஒழிக்கக் கருதினான். ஒரு முறை அந்தோனியா கடன் கேட்ட  பொழுது கொடுத்து விட்டு உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தாவிட்டால் 1 பவுண்டு தசையை வெட்டித்தர வேண்டும் எனக்  கேட்டுத் துன்புறுத்துவான்.)

இவ்வாறுதனிமைச்சிறையில்  முடிவு தெரிவதற்காக நெடுங்காலம் இருப்பதை முன்னிட்டுத் தண்டனைகள் குறைக்கப்பட்டு வருவதும் நீதிமன்ற  நடைமுறையாகிவிட்டது. இரண்டு ஆண்டு(எடிகா அன்னம்மா-Ediga Annamma), இரண்டரை ஆண்டு(பகவான் பாக்சு –Bhagwan Baux), மூன்றரை ஆண்டு (சாதுசிங் –Sadhu Singh), எனத் தூக்குத்தண்டனையை எதிர்நோக்கித்தனிமைச்சிறையில் இருந்தவர்கள் தண்டனைகள் வாழ்நாள் தண்டனைகளாக மாற்றப்பட்ட நேர்வுகள் மிகுதி.

இத்தனை முன்  தீர்ப்புகளும் முன் நடைமுறைகளும் இருப்பினும் மூவரின் தூக்குத் தண்டனையை  நீக்கவோ குறைக்கவோ இயலாது எனச் சிலர் கூறுகிறார்களே!  சரிதானா என்றும் பார்ப்போம்.

இங்குக் குறிப்பிட்ட வழக்குகள் பலவும் நீதி மன்றமே காலநீட்டிப்பைக் கருத்தில் கொண்டு தூக்குத் தண்டனையை வாழ்நாள் தண்டனையாக  மாற்றிய நேர்வுகள் ஆகும். அந்த நிலையை மூவர் தாண்டிவிட்டனர். அப்பொழுதே  முன் தீர்ப்புகள் அடிப்படையில்  இவர்களுக்கு விதித்த தூக்குத் தண்டனை மாற்றப்பட்டிருக்க வேண்டும்.

புலவர் கலிய பெருமாள் கருணை மனு அளிக்காத பொழுதும் திரு கல்யாணசுந்தரம் அவர்களுக்கு அப்போதைய குடியரசுத்தலைவர் திரு வி.வி.கிரி அவர்களே பிறரிடம் கையெழுத்து வாங்கி முறையிடுமாறு தெரிவித்ததற்கிணங்க 100,000 பேரிடம் கையொப்பம் பெற்றுத் தமிழக அரசிற்கு அதனை அனுப்பித் தூக்குத் தண்டனை வாழ்நாள் தண்டனையாக மாற்றப்பட்டது   இந்நேர்வில்  திரு வி.வி.கிரி அவர்களுக்கு இருந்த மனித நேயமும் தமிழகப் பற்றும் திரு ப.சிதம்பரத்திற்கு இல்லாதது வேதனைக்குரியதுதான்.தோழர்கள்தியாகு, இரெங்கசாமிலெனின், குருமூர்த்தி  ஆகியோருக்குஉயர்நீதிமன்றத்தால்தூக்குத்தண்டனை  உறுதிசெய்யப்பட்து. அதன்பின்புகருணைமனுஅடிப்படையில்மாநிலஅரசுபரிந்துரைத்துஆளுநர்வாழ்நாள்தண்டனையாகக்குறைத்தார்இந்நிலையும் இம்மூவருக்கும் உரிய காலத்தில் வழங்கப்படவில்லை.  ஏனெனில் அத்தகைய வாய்ப்பு  வந்த பொழுது  இவர்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை. 17.10.99 அன்று அளிக்கப்பட்ட கருணை மனுவை 27.10.99 அன்று ஆளுநர் மறுத்தபின்பு உயர்நீதி மன்றத்தில் இதனை ஏற்கவில்லை. எனினும் ஆளுநர் அதிகாரத்தில் நேரடிக் குறுக்கீடாக அமையக்கூடாது என்பதற்காகப் புதிய கருணை மனுவை வாங்கிப்  புதியஆணை வழங்க அறிவுறுத்தியது. இருப்பினும்  18.4.2000 அன்று நடைபெற்ற அமைச்சரவைக்  கூட்டத்தில்  மூவரின் கருணை மனுவை மீண்டும் மறுக்கப் பரிந்துரைத்தனர். பொதுவாக ஆளும் பொறுப்பில் இருந்தால் அச்சுறுத்தும் காங்கிரசிற்கு அடிபணியும் போக்கில்  இந்தியனாக இருப்பதும் எதிர்க்கட்சியாக இருந்தால்  தமிழனாகக் காட்டிக் கொள்வதுமான போக்கால் எடுக்கப்பட்ட முடிவே இது. 

மத்தியச் சட்ட அமைச்சர்  திரு சல்மான் குர்சித், குடியரசுத்தலைவரால் மறுக்கப்பட்ட பின்பு நீதி மன்றம் மேலாய்வு செய்ய இயலாது என்றும் தமிழகச் சட்டமன்றத் தீர்மானம் மத்திய அரசைக் கட்டுப்படுத்தாது என்றும் சொல்வதும் சரியா என்று பார்க்க வேண்டும்.

குடியரசுத்தலைவர் முடிவு  கேள்விக்குரியதல்ல என்றாலும் கருணை மனு தொடர்பாக நீதி மன்றம் சீராய்வு செய்யலாம் என  நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் கருணை மனு  என்பதே நீதிமன்றத் தீர்ப்பினைப் பற்றியதுதான் எனத் தெளிவு படுத்தி உள்ளனர். இதன் அடிப்படையில் குடியரசுத்தலைவரின் மறுப்பிற்குப் பின்னரும் பல கருணை மனுக்கள் பற்றி  உசாவிஉள்ளனர். குல்சீத் சிங் (Kuljeet Singh ) விண்ணப்ப முறையீட்டிலும் மேலும் பல விண்ணப்ப முறையீட்டிலும் ஆளுநர், குடியரசுத்தலைவர் ஆகியோரின் கருணை மனுவின் மறுப்பு முடிவுகள் நீதிமன்றப் பார்வைக்கு வந்துள்ளன. நீதிமன்றத்தால் வாழ்விற்கான தடை தூக்குத்தண்டனை வடிவில் வழங்கப்பட்டுக் கருணை வாசலைத் தட்டியவர்கள் அக்கதவு மூடப்பட்ட பின்பு மீண்டும் நீதிமன்றப் படியேறி நீதி பெற்ற நிகழ்வுகள் இருப்பினும் சட்டஅமைச்சர் சல்மான் தவறான தகவலை அளித்துள்ளார்.வழக்கறிஞரான திரு ப.சிதம்பரமே முன் நிகழ்வுகள் உள்ளதாகக் கூறியுள்ளமையால் நாம் தனியாக விளக்கப் தேவையில்லை. அதே போல், சட்டமன்றத் தீர்மானத்தைக் கொச்சைப்டுத்தும் வகையில் பேசியதும் தவறாகும்.  சட்டம் இயற்றக்கூடிய அமைப்பு ஒரு தீர்மானத்தை இயற்றி அனுப்புகின்றது என்றால் அதனைப் பரிந்துரையாகக் கருதி ஆய்வு செய்து எடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். நீதிமன்றத் தடை குறித்தும் அவர் தெரிவித்த கருத்து மறைமுகமாக அதன் மீது ஆதிக்கம் செலுத்தும் நோக்கினாலானது. நீதிமன்ற அவமதிப்பாக எடுத்து அவர் மீது நடவடிக்கை எடுத்துப் பதவியைப்பறிப்பதே ஏற்றதாகும்.

தமிழ்நாட்டில் வீரபாண்டியக் கட்ட பொம்மனின் வழிமுறையாளரான குருசாமி என்னும் தூக்குத்தண்டனையாளர், மூன்று முறை கருணை மனு மறுக்கப்பட்டு தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட பின்பு சென்னை உயர்நீதிமன்றத்தால் மீளாய்வில் தூக்குத்தண்டனையிலிருந்து மீட்கப்பட்டடார். கருணை மனுவின் மறுப்பிற்குப் பின்னரும்  நீதிமன்றத்தால் மீளாய்வு செய்து  தூக்குத் தண்டனை நீக்க அல்லது மாற்றப்படுவதற்கு இது சான்றாகும்.

குடியரசுத் தலைவரால் கருணை மனு  மறுக்கப்பட்ட பின்பு மாநில அரசு  மறு ஆய்வு செய்யலாமா என்றால் அதற்கும் முன் எடுத்துக் காட்டுகள் உள்ளன. சி.ஏ.பாலன் வழக்கில் குடியரசுத் தலைவரால் கருணை மனு மறுக்கப்பட்ட பின்புதான்  கேரள அரசால் மறு ஆய்வு செய்யப்பட்டு  அவரது தூக்குத் தண்டனை வாழ்நாள் தண்டனையாக மாற்றிக் குறைக்கப்பட்டது. எனவே, இதன் அடிப்படையில்  இம்மூவரின் கருணை மனுவும்  இப்போது தமிழக அரசால் ஆய்வு செய்யப்பட்டு விடுதலை  செய்யப்பட வேண்டும் அல்லது குறைந்தது  வாழ்நாள் தண்டனையாக மாற்றிக் குறைக்கப்பட வேண்டும் என்பது பலதரப்பாரின் வேண்டுகோள்.

உண்மையில் அரசமைப்புச் சட்டப்பிரிவு 72(1) இன் கீழ்க் குடியரசுத்தலைவர் எம்முடிவு எடுத்தாலும், அம்முடிவு அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 72.(3.) இன்படிஇறப்புத் தீர்ப்புத்தண்டனையை இடைநிறுத்தி வைக்க, குறைக்க அல்லது மாற்றியமைக்க மாநில ஆளுநர் செலுத்தத்தகும் அதிகாரத்திற்குஊறு ஏற்படுத்தக்கூடாது. எனவே, அரசமைப்புச் சட்டமே கருணை மனு குறித்து ஆளுநர் எடுக்கும் முடிவைக் குடியரசுத் தலைவர் எடுத்த கருணை மனு முடிவு கட்டுப்படுத்தாது எனத் தெளிவுபடுத்தி மன்னிப்பு அதிகாரத்தை வழங்கி உள்ளதால், ஆளுநர் மீளாய்வு செய்து கருணை மனுவின் கீழ் மன்னிப்பு வழங்கலாம் என்றாகிறது. இதன்படித்தான் அனைவரும் தமிழக அரசை நடவடிக்கை எடுக்க வேண்டுகின்றனர்.

ஆனால், அவ்வாறு இயலாது என முதல்வர் மறுக்கிறார். அதற்குக் காரணம்  மத்திய அரசு மடல் அனுப்பியதுதான். 5.3.1991 நாளிட்ட மடலில்  மத்திய உள்துறை அமைச்சரகம், மரண தண்டனை குறித்த நிகழ்வுகளில் அதன் தொடர்பான கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டம் 72-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவரால்  மறுக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161-ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு கூறு 257 (1)-ன்படி கட்டளையிடுகிறது எனத் தெரிவித்துள்ளதால் தம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்கிறார். அவர் கண்ணோட்டத்தி்ல் சரியே. ஆனால், மத்திய அரசு தவறான கருத்தைத் தெரிவித்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின்படியான அதிகாரத்தை அமைச்சரகம் மடல் மூலம் மறுக்க   மத்திய அரசிற்கு அதிகாரம் இல்லை. ஆட்சி அதிகாரங்களில் மாநில அரசின் முடிவிற்கு மேலாக மத்திய அரசு முடிவெடுத்தால் அதுவே இறுதி முடிவு என்பதை விளக்குவதுதான் சட்டப்பிரிவு 257(1). ஆனால் ஆட்சி அதிகாரம் தொடர்பான இப்பிரிவு  மூலம் பிரிவு 72.(3)  இன் கீழ் மாநில ஆளுநர்க்கு உள்ள மன்னிப்பு அதிகாரத்தைப் பறிக்க இயலாது.

எனவே, தெளிவும் உறுதியும் உள்ள முதல்வர் அவர்கள்,  அரசமைப்புச் சட்டப்பிரிவு 21 ஐக் காப்பதற்காக, மத்திய அரசிற்கு அதன் அதிகார ஆசை அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என மடல் அனுப்பி விட்டு, அரசமைப்புச் சட்டப்பிரிவு 72(3) இன்படி ஆளுநர் ஆணை பெற்று இம்மூவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

அதே நேரம் கொலை செய்யப்பட்டவர் தலைமை அமைச்சர் என்பதால் கருணை காட்டக்கூடாது என்பதுபோல் சிலர் பேசி வருவது குறித்தும் பார்ப்போம். சட்டத்தின் முன் யாவரும் சமம் என்னும் பொழுது கொல்லப்பட்டவர் யார், எவர் எனப் பார்க்கக்கூடாது.  யாராக இருந்தாலும் கொலையுண்டவர்; அவ்வளவுதான். இதனை வழக்கு தொடர்பான  நீதிபதியே  தெரிவித்துள்ளார். இந்திராகாந்தி வழக்கில் கொலைக் குற்றவாளிகளை மாவீரராக அறிவித்த பஞ்சாப்  ஆண்டுதோறும்  அவர்கள் நினைவு நாளையும் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. அது  குறித்துச் சினம் கொள்ளாத காங்கிரசு, இராசீ்வ் மறைவிற்கு உண்மையிலேயே கண்ணீர் சிந்தும் தமிழினத்திற்கு எதிராகத் தொடர்ந்து அழிவு வேலையில் ஈடுபடுவதும் முறையன்று. இம் மூவரையும் தூக்கிலிடவேண்டும் என்று கூக்குரலிடுவோர் முதலில் அன்னை இந்திராகாந்தி மறைவை முன்னிட்டுக் காங்கிரசார் புரிந்த ஆயிரக்கணக்கான கொலைகளுக்காகக் காங்கிரசுக் குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றி வி்ட்டுப் பின் அவரது மகன் வழக்கு குறித்துப் பேசட்டும். வழக்கு நடைபெறும் பொழுதோ தொடர்பான ஆய்வின் பொழுதோ மன்னிக்க வேண்டுவது உரிமை. ஆனால், தண்டிக்க வேண்டும் என்று சொல்வது முறையற்ற அறமற்ற செயல். நீதி மன்ற நடவடிக்கையில் குறுக்கிடும் அத்தகையோர்  மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடக்கு முறைக்கு ஆங்கிலேய ஆட்சியின் பொழுது இருந்த சட்டத்ததையே பின்பற்றும்  மத்திய அரசிற்கு இவ்வழக்கு போன்ற வழக்கில் ஆங்கிலேயர் நடந்து கொண்ட முறையை விளக்குவது  சிந்திக்க எண்ணுபவர்களுக்குக் கண்திறந்ததுபோல் அமையும் எனக் கருதுகிறேன். மௌண்ட்பேட்டன் இந்தியாவில் இங்கிலாந்து அரசின் ஆட்சியாளராக இருந்தவர் ; விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் தலைமைஆளுநராக இருந்தவர் ; எலிசபெத் அரசியாரின் நெருங்கிய உறவினருமாவார். இவர், வட அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்த பொழுது  27.8.79 அன்று  அயர்லாந்து குடியரசுப்படையினர்(IRA-Irish Republican Army), முல்லகுமோர் (Mountbatten)  என்னும் இடத்தில் இவர் பயணம் சென்ற நிழல் 5 (Shadow V) என்னும் மீன்பிடி படகினை வெடிக்கச் செய்து கொலை செய்தனர். அவருடன் அவரது பேரன் நிக்கோலசு (Nicholas Knatchbull-அகவை14) மகளின் மாமியார் சீமாட்டி பிரபார்ன் (Lady Brabourne- அகவை 82)  உள்ளூர்ச் சிறுவன்  பால் மாக்சுவல் (Paul Maxwell-அகவை15), ஆகியோரும் கொல்லப்பட்டனர். அயர்லாந்து குடியரசுப்படையினர், பிற மக்களுக்கு மவுண்ட் பேட்டன் என்ன செய்தாரோ அதைத்தான் தம் படையினரும் செய்ததாகக் கூறிக் கொலையை ஒப்புக் கொண்டனர். அதே நாளில் கவுண்டி டவுன் என்னுமிடத்தில் 18 இங்கிலாந்து வீரர்களையும் வெடிகுண்டு மூலம் கொன்றனர். சதித்திட்டம் தீட்டித் தொலைஇயக்கி மூலம் படகினை வெடிக்கச் செய்த தாமசு மக்மோகன் என்பவரும்   கைது செய்யப்பட்டு, 23.11.1979 இல்  அவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கப் பட்டது.

ஆனால், இக்கொலை குறித்து படுகொலையால் தன் தந்தையையும் மகனையும் இழந்த அமீலா மவுண்ட் பேட்டன் அவர்களுக்கு அதற்கென காரணங்கள் உள்ளன என்றாரே  தவிரப் பழிவாங்கும் போக்கில் நடந்து கொள்ளவில்லை.

தாமசுமக்மோகன், தெற்கு அரமாகு படையணியின்தலைவராக இருந்து  நூற்றுக்கணக்கிலான இங்கிலாந்து வீரர்களைக் கொன்றவர். வெடிகுண்டு வல்லுநர்ப்பயிற்சிக்கென முதன்முதலில் லிபியா அனுப்பி வைக்கப்பட்டு பயிற்சி பெற்றவர். இருப்பினும்  இவரின் நெடுங்காலத் தண்டனையைக் குறைத்து விடுதலை செய்ய வேண்டும் எனப் பிற மக்களுடன் இணைந்து போராடிய இருவரைக் குறிப்பிட்டாக வேண்டும். 1) கொலையுண்ட சிறுவனின் தந்தை சான் மாக்சுவெல்  2) இறந்த பேரனின்  (இரட்டைப்பிறப்பில் ஒருவரான) உடன்பிறப்பும் மவுண்ட்பேட்டன் கொல்லப்பட்ட பொழுது உடனிருந்து ஒரு கண் பார்வையை இழந்தவருமான. திமோதி நாட்சுபுல் (Timothy Knatchbull) ஆகியோரே அவர்கள்.  தாமசுமக்மோகன் 1998  இல் தூய வெள்ளி ஒப்பந்தம் எனப்படும் பெல்பாசுட் ஒப்பந்தத்தின் (Belfast Agreement) படி பிற விடுதலைப்படையினருடன் சேர்த்து விடுதலை செய்யப்பட்டார்.

ஆங்கிலேயர்கள் நேரடியாகத் தீங்கு இழைப்பிற்கு ஆளானாலும்  நெடுங்காலத் தண்டனைக்கு எதிராகப்  போராடி வெற்றி பெற்றுள்ளனர்.  இங்கோ மனித நலத்தை மறந்து பதவி நலத்திற்காக அப்பாவிகளைத் தூக்கிலிட வேண்டும் என்கின்றனர். இந்திராகாந்தி சுடப்பட்ட பின்பு 1 மணி நேரம் உயிருடன் இருந்துள்ளார். அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற உறவினர் மீதும் வேறு சில (ஆ)சாமிகள் மீதும் பலரால் வெளிப்படையாகக் குற்றம் சுமத்தப்பட்ட பொழுதும் அவர்கள் பற்றி யெல்லாம் விசாரிக்காமல் உண்மையைத் தூக்கிலிடும் வண்ணம் மூவருக்கும் தூக்குத்தண்டனை கோருவோர் இனி்யேனும் திருந்த வேண்டும்.

மனித நேயத்தில் பெரிதும் ஆர்வம் மிக்க அறவாணர்களாக உள்ள நீதிபதிகள் மூவரும் இருந்த காலமே போதுமான தண்டனைக்கு அதிகம் என்பதை உணர்ந்து மூவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் ஆளும்கட்சி, தோழமைக் கட்சிகளுடன் எதிர்க்கட்சியான தி.மு.க.முதலான பிற கட்சிகளும் தமிழ்த்தேசிய அமைப்புகளும் மனித நேய அமைப்புகளும் மூவர் விடுதலையை வலியுறுத்துகின்றன. இந்திய அளவில் காங்கிரசு, பா.ச.க. அல்லாதஅணிக்குத் தலைமைதாங்கும் வல்லமை படைத்த முதல்வர் அவர்கள் மத்திய அரசின் தவறான விளக்கத்திற்கு மறுப்பு தெரிவித்து உடனே  ஈராண்டிற்கு மேலாகத்தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்தால் அரசமைப்புச் சட்டப்பிரிவு 21 இன்கீழ்ப் பாதுகாப்பு வழங்கித் தூக்குத் தண்டனையை நீக்க வேண்டு்ம் என்னும் நீதிபதிகள் அறிவுறுத்தங்களுக்கு இணங்க மூவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

கருணை விடுதலை பெற்ற யாரும் அதன்பின் குற்றச்  செயலில் ஈடுபடவில்லை என்பதையும் கருத்தில் கொண்டு  தூக்குத் தண்டனையை எதிர்நோக்கித் தனிமைச்சிறையில்  இருக்கும்  பிறருக்கும் விடுதலை வழங்க வேண்டும்.

மத்திய அரசின் அடக்கு முறைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் முதல்வர் அவர்கள் சிங்கள இனப்படுகொலைக்கு எதிராகத் தீர்மானம் இயற்றித் தன் புரட்சி எண்ணத்ததை வெளிப்படுத்திய முதல்வர் அவர்கள் மூவரின் தூக்குத் தண்டனைக்கு எதிரான  கருணை மனுவாகச் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய மனித நேயக் காவலரான முதல்வர்அவர்கள் முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை!

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் கண்ணோடிப்

பொறுத்தாற்றும் பண்பே தலை (திருக்குறள் 579)

என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். இதன் மூலம், தண்டித்துத்தான் திருத்த முடியும் என்ற தன்மை கொண்டவரையும்  மன்னித்து நல்வழிப்படுத்தலே ஆட்சியாளருக்கு இருக்க வேண்டிய சிறந்தபண்புஎன வலியுறுத்துகிறார். அப்பாவிகளான மூவரும், உண்மையிலேயே  குற்றம் செய்திருந்தாலும் பெற்றிருக்க வேண்டிய தண்டனையைவிட மிகுதியான காலம்  தனிமைச் சிறையில் கழித்து  வருகின்றனர். உண்மையான குற்றவாளிகள் எனப் பலராலும்  ஊடகங்களாலும் சுட்டிக் காட்டப்படுபவர்கள்  கட்டுப்பாடின்றித் திரியும் பொழுது  இவர்கள் தண்டனை பெறுவது என்பது நாட்டிற்கே  நல்லதல்ல! நாளைய தலைமுறையும் நம்மைப் பழிக்கும்!

மனித நேயம் தூக்கிலிடப்படுவதில் இருந்து தடுப்பதற்காக

நீதித் தேவதை தூக்கிலிடப்படுவதில் இருந்து காப்பதற்காக

அற விதிகள் அழிவுவிதிகளாக மாறுவதில் இருந்து மீட்பதற்காக

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்பட  வேண்டும்.

மூவரையும் விடுதலை செய்திடுக! மூவாப்புகழ் எய்திடுக!

 

 

 

 

0010.1 பிறந்த நாள் வாழ்த்து வாழ்க தமிழுடன்!

Normal
0

false
false
false

EN-US
X-NONE
TA

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

பிறந்த நாள் வாழ்த்து  வாழ்க தமிழுடன்!

நன்னாள் பொன்னாள் இந்நாள்

வாழ்க நலமாய்ப் பாரிலே

நூறு நூறு ஆண்டுகள் ஆயினும்

வாழ்க வாழ்க தமிழுடன் என்றுமே!

0002.1 இதழியல் செம்மல் இலக்குவனார்

v\:* {behavior:url(#default#VML);}
o\:* {behavior:url(#default#VML);}
w\:* {behavior:url(#default#VML);}
.shape {behavior:url(#default#VML);}

Normal
0
false

false
false
false

EN-US
X-NONE
TA

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

இதழியல் செம்மல் இலக்குவனார்

       இலக்குவனார் திருவள்ளுவன்

தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்

ஒருங்கிணைப்பாளர், இலக்குவனார் இலக்கிய இணையம்

முன்னுரை

  தமிழ்க்காப்புத் தலைவர், செந்தமிழ் மாமணி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களின் வாழ்க்கைச் சுவடுகள் என்பன முற்றிலும் தமிழ்நலனுக்காக அவர் சந்தித்த போர்க்களங்களே ஆகும்.  போர்க்களத்தில் அவர் அடைந்த வெற்றிவாகைகள் என்பன தமிழ், தமிழர் பெற்ற பயன்களாகும். அவர் சந்தித்த ஏமாற்றங்கள் என்பன தமிழுக்கும் தமிழர்க்கும் ஏற்பட்ட பின்னடைவுகள் ஆகும்.

களப்பணியில் இதழ்ப்பணி

  தமிழுக்காகவும் தமிழர்க்காகவும் தமிழாக வாழ்ந்த பேராசிரியரின் பணி கல்விப்பணியுடன் இணைந்த களப்பணியாக அமைந்தது. களப்பணி என்பது, இலவசத் தமிழ்க்கல்வி, தமிழ் இலக்கியப்பரப்புரை, தமிழ்நலப் போராட்டங்களை நடத்துதல் முதலான பலவாகும். இத்தகயை களப்பணியில் குறிப்பிடத்தக்க இடம்  பெறுவது பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் இதழியல் பணியாகும். பெருஞ்செல்வந்தர்களும் நாளிதழ் நடத்த அஞ்சும் காலத்தில் தமிழ்நலனுக்காகவே குறள்நெறி என்னும் நாளிதழ் நடத்தினார் என்பதே அவரது பெருமைக்குச் சான்றாகும்.

இதழ்கள் வழி இலக்கியப் பரப்புரையாளர்

  பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் பத்து ஆங்கில நூல்களையும் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களையும் படைத்தளித்துள்ளார். இவை யாவும் தமிழ் இலக்கியங்கள் மீது சிலரால் வேண்டுமென்றே படியவிடப்பட்ட ஆரியக் கறைகளை அகற்றுவனவாகவும் பொய்மைப் புனைந்துரைகளை நீக்குவனவாகவும் தமிழின் தொன்மையையும்  மேன்மையையும் வண்மையையும் நுண்மையையும் தாய்மையையும் தூய்மையையும் வெளிப்படுத்துவனவாகவும் தமிழர்களின் நாகரிகப் பண்பாட்டு வரலாற்றுச் சிறப்புகளை உலகிற்கு அறிவிப்பன வாகவும் அமைந்தவை. எனவே, தமிழின எழுச்சியை ஏற்படுத்த  இவ்வாராய்ச்சி நூல்களும் விளக்க நூல்களும் பேராசிரியர் அளித்த கருவிகளாய்  அமைந்தன. ஆனால் இவரது புலமை மிகு கருத்துகள் உயர்நிலையில் படிப்போரிடையே மட்டுமல்லாமல் எளிய மக்களையும் சென்று சேர்வதற்கு அவரின் இதழ்ப்பணி சிறப்பான ஊடகமாக அமைந்தது.

இலக்கியங்களை மக்களிடையே பரப்பிய மாமனிதர் 

  பேராசிரியரின் இதழ்ப்பணிகளால் தமிழ் இலக்கியங்கள்  புலவர்கள் மட்டுமே படித்தற்குரியன என்னும் தவறான எண்ணம் விலகியது. இவை வாழ்வியல் இலக்கியங்கள்; தமிழராய்ப் பிறந்த ஒவ்வொவரும் கட்டாயமாக அறிய வேண்டியவை; பழந்தமிழர்களின் பன்முகச் சிறப்பு களையும் நமக்கு உணர்த்தி இன மான உணர்வுகளை ஊட்டுபவை என அனைவரும் உணர்ந்தனர். எனவே, பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்கள் செய்தி ஊடகத்தைக் கருவியாகக் கொண்டு தமிழ் இலக்கியங்களை மக்களிடையே பரப்பிய மாமனிதராய் விளங்கினார் எனலாம்.

செய்தி இதழ்களுக்கும் இலக்கியத் தகுதி அளித்தவர்

  பேராசிரியரின் இதழ்ப்பணி அவரது கள வாழ்வை எளிமைப்படுத்தவும் மக்களிடையே பரப்பி ஈர்க்கவும் சிறப்பானதொரு பங்களிப்பை வழங்கியது எனில் மிகையாகாது. தகவல் தொடர்பு ஊடகமான இதழ்களின் வாயிலாகப் பேராசிரியர் அவர்கள் தமிழுலகத்தினரைத் தட்டி யெழுப்பவும் ஆற்றுப்படுத்தவும் இலக்கிய ஈடுபாடு கொள்ளச் செய்யவும் இனமானத்துடன் திகழச் செய்யவும்  சிறப்பாகப் பணியாற்ற முடிந்தது. வெறும் பேராசிரியராகவோ நூலாசிரியராகவோ சொற்பொழிவாளராகவோ  தமிழ்த் தொண்டராகவோ மட்டும்  இல்லாமல் தமிழ்க்காப்புத் தலைவராகப் பேராசிரியரைத் திகழச் செய்ததில் அவர் நடத்திய இதழ்களுக்குப் பெரும் பங்கு உண்டு. தமிழ் இலக்கிய வளங்களை மக்களிடையே சேர்த்து மக்கள் இலக்கியங்களாக அவற்றை மாற்றச் செய்யவும்  இதழ்களுக்கு இலக்கியத் தகுதி கிடைக்கச் செய்யவும் பேராசிரியரின் அரும் பெரும் முயற்சிகள் வழி வகுத்தன. இந்தி எதிர்ப்புப் போரில் மாணாக்கர்களையும் பொது மக்களையும் ஈடுபடச் செய்து அதனை மக்கள்  போராக மாற்றப் பேராசிரியரின் இதழ்ப்பணியே பெரும் பங்காற்றியது. எனவே, பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் இதழ்ப்பணிகளை நாம் அறிவது அவரது அயரா முயற்சிகளையும் அருந் தொண்டுகளையும் அறிய வாயிலாக அமையும்.

 மாணாக்க நிலையில் இதழியல் ஈடுபாடு

 பேராசிரியர் அவர்கள் பள்ளி மாணாக்கராய்த் திகழ்ந்த போதே எழுத்திலும் பேச்சிலும் ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். பள்ளியில் நடைபெறும் விழாக்கள், சிறப்பு நிகழ்வுகளின் பொழுதும் மலர்களிலும் கவிதைகள் எழுதித் தன் எழுத்தார்வத்தை வளர்த்துக் கொண்டார். திருவையாற்று அரசர் கல்லூரியில் புலவர் பட்டத்திற்குப் பயிலும் பொழுது குடியரசு, இந்து நேசன், தமிழ்ப் பொழில் முதலான இதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி இதழுலகில் அடியெடுத்து வைத்தார். மாணவ நிலையில் இல்லாமல் ஆராய்ச்சியாளர் நிலையில் இவரது கட்டுரைகள் அமைந்தமையால் இவையாவும் பெரும் வரவேற்பினைப் பெற்றதாக இவருடன் பயின்ற இவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

 ஆசிரிய நிலையில் இதழியல்  ஈடுபாடு

 தந்தை பெரியார் அவர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டுத் தம்முடைய வாழ்க்கையை இனமானப் பாதையில் செலுத்தியவர் பேராசிரியர் அவர்கள். தன்மானத் தந்தை பெரியார் அவர்களும் பேராசிரியர்பால் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவராக விளங்கினார். எனவேதான் தந்தை பெரியார் அவர்கள், “யான் வேறு இலக்குவனார் வேறு இல்லை என்று குறிப்பிட்டார். இருப்பினும் தந்தை பெரியார் அவர்கள் கம்பராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று அறிவித்த  பொழுது அதற்கு மாறான நிலையை எடுத்த பேராசிரியர் அவர்கள், இது குறித்த பல வினாக்களைத் திராவிடநாடு இதழுக்கு அனுப்பி  வைத்தார். பேரறிஞர் அண்ணா அவர்கள் அவ்வினாக்களையும் அவற்றிற்கான விடைகளையும் தம் இதழில் தொடர்ந்து வெளியிட்டார். இதனால் பேராசிரியர் அவர்களுக்கு இதழுலகில் ஈடுபாடு மேலும் பெருகியது.

நேரடி இதழியல் ஈடுபாட்டிற்கு வித்து

  பேராசிரியர் அவர்களை இதழ்ப்பணியில் நேரடியாக ஈடுபடச் செய்தது நெல்லையில் நடந்த ஒரு சிறு நிகழ்வே ஆகும். திருநெல்வேலியில் வட்டத் தொட்டி என்னும் அமைப்பின் சார்பாக நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய சொற்பொழிவாளர் ஒருவர் (திரு. திரிமூர்த்தி) சங்க இலக்கியத்தை வங்கக்கடலில் போட வேண்டும் என்று பேச அங்குக் கூடியிருந்தவர்களும் கைதட்டி வரவேற்றனர் என்ற செய்தியை அறிந்த பேராசிரியர் அவர்கள் உள்ளம் பதைத்து  இவ்வாறு பேசியதும் மக்கள் வரவேற்றதும் மக்களின் குற்றமாகாது; மக்களிடையே சங்க இலக்கியத்தைக் கொண்டு செல்லாத தமிழ்ப் புலவர்களின் குற்றம்தான் எனக் குறிப்பிட்டு மக்களிடையே சங்க இலக்கியத்தை எளிய இலக்கியமாகப் பரப்ப வேண்டும் என்னும் நோக்கோடு  சங்க இலக்கியம் என்னும் கிழமை இதழை நடத்தி இதழுலகில் நேரடியாகத் தடம் பதித்தார்.

 நடத்திய இதழ்கள்

 1945 முதல் 1947 வரை நெல்லையில் சங்க இலக்கியம் இதழ் நடத்திய பேராசிரியர் அவர்கள் பின் விருதுநகரில் (1952 வரை) இலக்கியம் என்னும் இதழை நடத்தினார். பின் தஞ்சாவூரில் (1952) ‘திராவிடக் கூட்டரசு என்னும் கிழமை இதழையும்  ‘Dravidian Federation’ என்னும் ஆங்கிலத் திங்களிருமுறை இதழையும் நடத்தினார். இவற்றின் தொடர்ச்சியாகப் புதுக்கோட்டையில்(1954-1955)குறள்நெறி என்னும் திங்களிதழை நடத்தினார். கால ஆராய்ச்சி குறித்து வேண்டு மென்றே குறைபடவும் பிழைபடவும் எழுதியவர்களுக்கு மறுப்பாகக்  கால வரலாற்று உண்மையை இவ்விதழில் வெளியிட்டுத் தமிழ் இலக்கியங்களின் தொன்மையை நாடறியச் செய்தார். பேராசிரியர் அவர்கள் மதுரையில் வாழ்ந்த பொழுது குறள்நெறி (1963-1971) என்னும் திங்களிருமுறை இதழ்,‘குறள்நெறி (1966) என்னும் நாளிதழ்,  ‘Kuralneri’ (1966) என்னும் ஆங்கிலத் திங்களிருமுறை இதழ் ஆகியவற்றை நடத்தினார். (பேராசிரியர் அவர்கள் சென்னையிலும் ஐதராபாத் திலும் பணியாற்றிய இடைக்காலத்தில்  குறள்நெறி இதழ் அவருடைய மக்களுள் ஒருவரான முனைவர் இலக்குவனார் மறைமலை அவர்களை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்தது.)

தமிழை வளப்படுத்துவதற்காக இதழ்ப்பணி

   குறள்நெறியை மக்களிடையே பரப்பவும் தொல்காப்பியத்தின் ஒல்காப் புகழை அறியச் செய்யவும் சங்க இலக்கியங்களை அனைவரும் படிப்பதற்கும் எனக் குறள்நெறி இதழைப் பேராசிரியர் அவர்கள் நடத்தி வந்துள்ளார்கள். அத்துடன் தமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை;  தமிழில்தான் எல்லாம் என்ற நிலையை விரைவில் உண்டாக்கவும், தமிழர் பங்குபெற உரிமையுள்ள இடங்களில் எல்லாம் தமிழும் இடம் பெறவும், காலத்துக்கேற்ப, மரபு கெடாது, தமிழை எல்லா வகையாலும் வளப்படுத்தவும் வாழ்தல் என்னும் தம்முடைய குறிக்கோளை மக்களிடையே விதைக்கவும் இதழ்ப் பணியைத் தொடர்ந்தார்.

 இந்தி எதிர்ப்புப் போரின் படைக்கலன்

பேரறிஞர் அண்ணா அவர்கள் வாயிலாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தை இந்தி எதிர்ப்புப் போருக்கு ஆற்றுப்படுத்திய பேராசிரியர் அவர்கள் குறள்நெறியை இந்தி எதிர்ப்புப் போருக்கான படைக்கலனாக மாற்றினார். இந்தி முதன்மையால் ஏற்படும்  அழிவுகளையும் தமிழ்க்காப்பின்  இன்றியமையாமையையும் தாம் வலியுறுத்தியதுடன் நில்லாது இந்தி எதிர்ப்பு பற்றிய கட்டுரைகள், பாட்டரங்கம் முதலியன மூலம் அறிஞர்கள், புலவர்கள், ஆசிரியர்கள், மாணாக்கர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொது மக்கள் என அனைத்துத் தரப்பாரையும் இதில் ஈடுபடச் செய்தார். இந்தி  எதிர்ப்புப் போரில் யாரேனும் களப்பலியாக வேண்டும் என்றால் முதல் ஆளாகத் தான் இருக்கின்றேன் எனச் சொல்லித் துணிந்து ஆட்சியாளரின்  இந்தி அடிமைப் போக்கை எதிர்த்தும்  தமிழ் உரிமைக் காப்பிற்காகவும் வாலாயமான அடக்குமுறைச் சட்டத்தின் கீழும் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் என இருமுறை சிறை வாழ்க்கையைச் சந்தித்தவர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் என்றால் அதற்கு அடிப்படையாய் அமைந்தது  அவரின் இதழ்ப்பணியே யாகும். அதேபோல், இந்தி எதிர்ப்புப்போருக்கான களத்தில் மக்களைக் குறிப்பாக மாணாக்கர்களை ஆயத்தப் படுத்தியதில் பெரும் பங்கு வகித்ததும் பேராசிரியர்  அவர்களின் இதழ்ப்பணியேயாகும்.

படைப்புகளின்  பகுப்பு

  பேராசிரியர் இலக்குவனாரின் இதழ்களில் திருக்குறள், இலக்கியம் தொடர்பான படைப்புகளுடன் அரசியல், வாழ்வியல், நாட்டியல், மொழியியல், அறிவியல், கலைச் சொற் பட்டியல், அன்றாடப் பயன்பாட்டுச் சொற்பட்டியல், நீத்தார் போற்றல், அறிஞர்களைப் போற்றல், ஆட்சி மாற்றம், இந்தி எதிர்ப்பு, மொழி பெயர்ப்புப் படைப்புகள், தொடர்கதை, தொல்காப்பிய விளக்கம், சிறுகதை, திரைப்படத் திறனாய்வு, வாழ்க்கை வரலாற்றுத் தொடர், தமிழ் அமைப்புகளின் செய்திகள் எனப் பலவகைப் படைப்புகளையும் காண முடிகின்ற போது இவ்வறிஞரின் நோக்கம், எல்லாச் செய்திகளையும் எளிய இனிய தமிழில் அளிப்பதே என்பது தெளிவாகின்றது.

ஆசிரிய உரைகளின் வகைமை

  பேராசிரியரின் ஆசிரிய உரைகளை 1.) இலக்கு சார்ந்தவை 2.) தமிழ் உரிமை சார்ந்தவை 3.) தமிழ்நெறி சார்ந்தவை 4.) கூட்டரசில் சமஉரிமை வேண்டுபவை 5.) இந்தி எதிர்ப்பு சார்ந்தவை 6.) கல்வி சார்ந்தவை 7.) இலங்கைத் தமிழர்கள் பற்றியன 8.) நினைவுரைகள் 9.) ஆன்றோர் பற்றியன  10.) கிளர்ச்சிகள் தொடர்பானவை 11.) தேர்தல் முதலிய அரசியல் பற்றியன 12.) பிற என வகைப்படுத்தலாம். தமிழக மக்களின் சிக்கல்களுடன் நில்லாது பிற மாநிலங்கள் பிறநாட்டுச் சிக்கல்கள்குறித்தும் கருத்துகளைப் பதிந்துள்ளார். இவற்றையும் விலைவாசி முதலான பொருளியல் சார்ந்தவற்றையும் பிற என்னும் தலைப்பில் அடக்கலாம். பேராசிரியரின் பயிற்சி மொழி தொடர்பான கருத்துகளைக் கல்வி சார்ந்தவை எனக் கூறுவதை விடத் தமிழ் உரிமை சார்ந்தவை என்பதே சரியான பகுப்பாக அமையும். இந்தி எதிர்ப்பை வலியுறுத்துவதன் நோக்கம் கூட்டரசில் தமிழுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும்  என்பதால் இவற்றின் பகுப்பும் மாறுபடும். கூட்டரசில் தமிழுக்கான உரிமை வேண்டுவன எல்லாம் அரசியல் பகுப்பிலும் அடங்கும். கிளர்ச்சிகள் தொடர்பானவை என்பவெல்லாம் பயிலுநர், பணியாற்றுனர் உரிமைகளை வலியுறுத்துவனவே. நினைவுரைகள் என்பன கூட ஆன்றோர் பற்றியனவே. பேராசிரியர்கள் இலக்கு பற்றியனவும் தமிழ் உரிமை சார்ந்தவையாயும் தமிழ் நெறி சார்ந்தவையாயும் உள்ளன. எனவே, இந்த வகையில் தமிழ் நலச்சார்பில் அவரது தலையங்கங்களாகிய ஆசிரியஉரைகளை வகைமைப்படுத்தலாம்.

முழக்கங்களின் வகைகள்

  கட்டுரை, கவிதைப் படைப்புகள் போல் மக்களிடையே தமிழ் உணர்வுகளை விரைவில் தூண்டக் கூடிய சிறப்பினைப் பெற்றவை இவரது இதழ்களில் இடம் பெற்ற தமிழியச் சிந்தனைகளும் தமிழ் முழக்கங்களுமாகும். இவற்றை, 1. பயிற்சி மொழி, ஆட்சி மொழி, அயல்மொழி முதன்மை அகற்றம், பிழையின்றி எழுதுதல், முதலான மொழி சார்ந்தவை, 2. இனம் சார்ந்தவை, 3. குறள்நெறி சார்ந்தவை, 4. இலக்கியமேற்கோள்கள், 5. பகுத்தறிவு சார்ந்தவை,  6. போர்க்காலத்தில் இடம் பெற்ற ஒருமைப்பாடு சார்ந்தவை, 7. பொதுவானவை, என ஏழு வகையாகப் பகுக்கலாம். இங்ஙனம் பல்வேறு தமிழ் முழக்கங்கள் மூலம் தமிழ் உணர்ச்சியைப் பரப்பிய தலைமை இதழாளராகப் பேராசிரியர் இலக்குவனார் அவர்கள் திகழ்ந்துள்ளார். தமிழியக்கப் படைப்புகள் ஏற்படுத்திய தமிழ் உரிமை எழுச்சியை இத்தகைய முழக்கங்களும் ஏற்படுத்தி இவரது இதழ்களின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் வித்திட்டுள்ளன எனலாம்.

தொலைநோக்குப் பார்வை

  பேராசிரியரின் எழுத்துரைகளுக்குப் பின் இரண்டு தலைமுறைகள் தோன்றி விட்டன. ஆனால், அவர் தெரிவித்துள்ள கருத்துமணிகள் இன்றைக்கும் நமக்கு வேண்டப் படுவனவாகத்தான் உள்ளன. ஒரு புறம் பேராசிரியரின் தொலைநோக்குப் பார்வையை இஃது உணர்த்தினாலும் மறுபுறம் தமிழ்நாட்டின் மாறா அவலங்களையும் உணர்ந்து வருந்த வேண்டியுள்ளது. செந்தமிழ்மொழி எல்லா நிலைகளிலும் ஏற்றம் பெற உழைக்க வேண்டும் என்றார் பேராசிரியர். அவ்வாறு உழைப்போர் யாருமிலர்; அவ்வாறு சிறுபான்மையர் குரல் கொடுத்தாலும் செவிமடுப்பார் இலர்.

தமிழே நம் தேசியமொழி

    தமிழர்கள்,“தமிழே நம் தேசியமொழி  என  உணர்ந்து அவ்வாறே அழைக்க வேண்டும் என்றும் வட்டார மொழி என அழைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார் பேராசிரியர். ஆனால் கல்வியகங்கள், ஊடகங்கள், அரசியல்வாதிகளால் இந்தியே தேசிய மொழி என்னும் பொய்யான கருத்து வன்மையாகத் திணிக்கப்படுகிறது.

தமிழினத்தை விரும்பா இந்திய அரசு

  இந்திய அரசினர் தமிழ் இனம் என ஒன்று இருப்பதை விரும்பவில்லை என்றும் தமிழர்களின் பண்டைய வரலாற்றை மறைக்கவே செய்வார்கள்  என்றும் கவலைப்பட்டார் பேராசிரியர் அவர்கள். இன்றும் இந்த இழிநிலைதான் தொடருகின்றது. தமிழ்மக்களுடைய உதவிகள் தேவைப்படும் போதெல்லாம்  அவற்றைப் பெறுவதற்காக இந்தியர் என்றும் தமிழ்மக்களுக்கு உதவித் தேவைப்படும் போதெல்லாம்  புறக்கணிப்பதற்காகத் தமிழர் என்றும் இரட்டை அளவுகோலை இந்திய அரசு கொண்டுள்ளது. எனவேதான் அயல்வாழ் இந்தியர் கூட்டம் தமிழ்நாட்டில் நடந்தபொழுதுகூட ஈழத்தமிழர் சிக்கல்களையோ தமிழக மீனவர்கள் சிக்கல்களையோ பேசக்கூடாது; ஏனெனில்  இந்தியர் கூட்டம் என மறுக்கப்பட்டது. தமிழர்கள் இந்தியர் அல்லர் எனில் ஏன் இந்தியா என்னும் அமைப்பில் அடைத்து வைத்திருக்க வேண்டும்? என்னும் வினாவிற்கு விடை கூறுவதில்லை.

கல்வி வழங்கல் பொறுப்பு அரசையே சாரும்

  தேர்வுக்காக ஆயத்தம் செய்வதே கல்விநிலையங்களின் கடமை என்பது மாற வேண்டும் என வலியுறுத்தி வந்தார் பேராசிரியர். ஆனால் படிப்பது என்பதே பணியாற்றத்தான் என்னும் போக்கே இன்னும் மேலோங்கியே காணப்படுகிறது. கலைக்கூடங்கள் கொலைக்கூடங்களாக உள்ளமையால், அரசே கல்விச் செல்வத்தை வழங்க வேண்டும் என்றும் பேராசிரியர் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அரசின் செயல்பாடு என்பது கல்விக்கூடக் கொள்ளையர்களை உருவாக்குவதாகத்தான் உள்ளதே தவிர நேரடியாகக் கல்வித் தொண்டில் ஈடுபட்டு உயர்கல்வி வரை அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்னும் கடப்பாட்டை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

ஒருமைப்பாடு தமிழ் வரலாற்றைப் புதைக்கவா?

    தேசிய ஒருமைப்பாடு எனும் காரணம் காட்டித்தமிழக உண்மை வரலாற்றைத் தமிழர்களே அறியாதவாறு செய்ய முற்படுவதையும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.  இந்த இழிநிலை இன்னும் தொடர்வதால்தான், தமிழகப் பகுதிகளைப் பிறருக்குக் கொடுத்தது போல், தமிழ் உறவுகளை இழந்தும், வஞ்சகர்கள் தமிழ் நிலத்தைப் புதைகாடாகவும் எரிகாடாகவும் ஆக்கியும் வாய்மூடி அமைதி காக்கின்றோம்.

தாக்கப்படும் தமிழர்களுக்காகக்  குரல்  கொடுக்கும்  மத்திய அரசு இல்லை

    வசதியற்றவர்களாய் ஈழத்திலும் காழகத்திலும் சிங்கப்பூரிலும் இன்னும் பிற நாடுகளிலும் கூலிகளாய்த் துன்பம் சுமந்து வாழும் தமிழர் அங்கெல்லாம் வெறி வேங்கைகளால் தாக்கப்படும்போது ஏன்? என்று கேட்க எவரும் இல்லை. நாடற்றவர்களாக விரட்டப்படுகின்றனர். நடுக்கடலில் தத்தளிக்கின்றனர் சிலர். தாய்நாட்டில் நுழைந்துவிட்ட காரணத்தால் பிச்சைக்கக்காரர்களாக ஆக்கப்பட்டு விட்டனர் பலர் எனப் பெரிதும் வருந்தி பேரிடர்க்கான விழிப்பு மணியை – அபாய மணியை – அன்றே பேராசிரியர்   ஒலிக்கச் செய்தும் கேளாச் செவியினராகவே நாம் இன்னும் இருக்கின்றோம்.

இலங்கையரசின் நட்பிற்குத் தமிழர்களைப் பலிகொடுக்கும் இந்தியா

    இந்திய அரசு இலங்கையரசின் நட்புக்காகத் தமிழர்களைப்  பலி கொடுத்து விடுவார்களோ என்று தம் அச்சத்தை அன்றே பேராசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். எவ்வளவு பெரிய வருந்தத்தக்க உண்மை என்பது நாளும் தமிழ் மீனவர்களையும் நூறாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களையும் பறிகொடுத்தும் நம்மில் பலர் புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் பெரிதும் வேதனையாக உள்ளது.

தேசிய மொழிகளுக்குச் சமஉரிமை

    ஆங்கிலத்தை அகற்றப் போராடிக் கொண்டிருக்கும் நம் மீது இந்தி மொழியைத் திணிப்பதையும் இந்திக்கு மட்டும் முதன்மை என்பது அதன் செல்வாக்கிற்கும் பிற மொழிகளின் வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பதையும் அனைத்துத் தேசிய மொழி களுக்கும் சம உரிமை அளிப்பதே கூட்டரசை நிலைக்கச் செய்யும் என்பதையும் பல இடங்களில் பேராசிரியர் வலியுறுத்தி வந்துள்ளார். இருப்பினும் இந்தியின் முதன்மை என்பது நாளும் மத்திய அரசால் புகுத்தப்படுவதாகவும் நம் தேசிய மொழிகளும் தேசிய இனங்களும் மறக்கடிக்கப்படுவனவாகவும்தான் இன்றுவரை உள்ளன.

சாதிக்கட்சிகளைத்தடைசெய்!

   தமிழரல்லாதவர்களால் புகுத்தப்பட்ட சாதியை அறவே அகற்றவும் சாதிக்கட்சிகளைத் தடைசெய்யவும் பேராசிரியர் கூறும் அறிவுரைகள் இன்றும் பயன்படுத்தத்தக்கனவே.

 

மன்பதை நோய்க்கு மருந்து மாணவர் கிளர்ச்சி

   நோய்க்கு மருந்தேபோல் மன்பதை நோய்க்கு மாணவர் கிளர்ச்சியும் வேண்டப்படுவது எனப் பேராசிரியர் கூறியுள்ளது,  போராட்டங்களையே நடைமுறை வாழ்க்கையாகக் கொண்டவர் உட்பட, இதுவரை வேறு யாரும் கூறாதது. இந்தி நோயைப் போக்க மாணவர்களைக் களத்தில் இறக்கிய பேராசிரியர் கருத்து இவ்வாறுதானே இருக்க இயலும்! கிளர்ச்சிகளை வன்முறையால் அடக்காமல் அவற்றிற்கான காரணங்களை அறிந்து போக்க வேண்டும் எனவும் மென்முறையால் அகற்ற வேண்டும் எனவும் பேராசிரியர் தெரிவிக்கும் நல்லுரைகளைப் பின்பற்றினால் ஆட்சி என்பது என்றும் நல்லரசாகவே திகழும் அன்றோ!

தமிழ் காக்கும் ஆசிரிய உரைகள்

    தேவநாகரி எழுத்துகளை அனைத்து மொழிகளிலும் பயன்படுத்தினால் ஏற்படும் பேரழிவு, கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடு, சங்கங்கள், பல கட்சிமுறை வேண்டாமை, தேர்தல், குடியாட்சி, தமிழ்க்காப்பு எனப்பல வகை குறித்தும் பேராசிரியர் ஆசிரிய உரை எழுதியுள்ளார். இவையாவும் இன்றைக்கும் நாம் பின்பற்றப்படவேண்டியனவே.

முழு உரிமையுடைய தமிழக அரசே தேவை!

    தமிழர்க்கு எல்லாம் தமிழாக இருக்கும்நாள்தான் தமிழர் முன்னேறும் நாளாகும்; முழு உரிமை பெற்ற நாளாகும் என்றும் முழு உரிமையுடன் கூடிய தமிழக அரசைப் பெறவேண்டும்என்றும் மக்கள் நன்மைகளுக்கான மக்களால் ஆளப்படும் மக்களாட்சியே வேண்டும் என்றும் பேராசிரியர் வலியுறுத்துவதை இன்றேனும் நாம் உணர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். 

மக்களுக்காக மொழி; மொழி காக்க மக்கள்!

  பேராசிரியர் இலக்குவனார் அவர்கள் எத்தனை இதழ்கள் நடத்தியிருப்பினும் அவற்றின் அடிப்படை நோக்கம் தமிழ் நலமேயாகும். மக்களுக்காக மொழி; மொழி காக்க மக்கள்என்னும் வாழ்வியல் உண்மையை உரைக்கும் பேராசிரியர் மக்கள் நல்வாழ்விற்காக மொழி நலத்தை வலியுறுத்தியதுடன் பிற எல்லாக் குறைகளையும் அகற்ற வேண்டியதன் இன்றியமையாமையையும் வலியுறுத்தியுள்ளார்.

இதழியல் வல்லுநர்களை உருவாக்கிய பெருமை

  உயர் ஊதியம் பெற்று வந்த பேராசிரியர், அதனைக் கொண்டு தம்மையும் தம் குடும்பத்தையும் உயர்த்தினால் போதும்  என ஒருபோதும் எண்ணியதில்லை. தமிழையும் தமிழரையும் தமிழ் உலகையும் பற்றி மட்டுமே சிந்தித்துச் செயல்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பையும் உறுதுயரையும் பொருட்படுத்தாமல் உழைத்தார்! உழைத்தார்! உழைத்துக்கொண்டே இருந்தார்! உயர்கல்வி எய்திய புலவர் என ஒதுங்காமல் மக்களுக்கான மக்கள் தலைவர் என்ற நிலையில் மக்களோடு மக்களாகக் களப்  பணிகளில் ஈடுபட்டார். அதற்குப்  பெரிதும் துணை நிற்கும் கருவியாக இதழ்ப்பணியை அமைத்துக்கொண்டார். இனிய எளிய தமிழில் திங்களிதழ்கள், கிழமை  இதழ்கள், இலக்கிய இதழ்கள் மட்டுமல்லாமல் நாளிதழும் நடத்த  முடியும் என நடத்திக் காண்பித்தார். அவரது இதழ்களில் பணியாற்றியவர்கள் பின்னர் பல்வேறு இதழ்களிலும் பணியாற்றும்  வாய்ப்பைப் பெற்றனர். இதழியல் வல்லுநர்களை உருவாக்கிய இத்தகு  பெருமை இதழியல் தந்தை ஆதித்தனார் அவர்களுக்கும் இதழியல் செம்மல் இலக்குவனார் அவர்களுக்கும் மட்டுமே உரித்தானது ஆகும்.

இதழியல் செம்மல்

  இதழ்கள் செய்திகளைத் தருவதற்கும் பொழுதுபோக்காக வாசிப்பதற்கும் மட்டுமல்ல ;  மக்களை நாட்டு அவலங்களுக்கு எதிராக மெருகேற்றும்  ஆயுதங்களாகவும் விளங்க வேண்டும் என்பதை மெய்ப்பித்துக் காட்டியவர் இதழியல் செம்மல் தமிழ்ப்போராளி  பேராசிரியர் சி.இலக்குவனார்.

இதழியல் செம்மல் இலக்குவனார் வழிநின்று இன்தமிழ் காப்போம்!

++++++

03.09.2013 – பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் 40 ஆம் ஆண்டு நினைவுநாளாகும்.

 

http://mudukulathur.com/?p=20002

 

திரு பதிவுகள் – அட்டவணை

திரு பதிவுகள்

அட்டவணை

0001 பேரா.முனைவர் சி.இலக்குவனார் படைப்புகள்
0002 பேரா.முனைவர் சி.இலக்குவனார் பற்றியன
0003 இலக்குவனார் திருவள்ளுவன் கட்டுரைகள் – ஆட்சித்தமிழ்
0004 இலக்குவனார் திருவள்ளுவன் கட்டுரைகள் -அறிவியல் தமிழ்
0005 இலக்குவனார் திருவள்ளுவன் கட்டுரைகள் – ஆன்றோர்
0006 இலக்குவனார் திருவள்ளுவன் கட்டுரைகள் – ஈழம்
0007 இலக்குவனார் திருவள்ளுவன் கட்டுரைகள் – இதழுரைகள்
0008 இலக்குவனார் திருவள்ளுவன் கட்டுரைகள் -செவ்வி
0009 இலக்குவனார் திருவள்ளுவன் கட்டுரைகள் – கருத்தரங்க உரைகள்
0010 இலக்குவனார் திருவள்ளுவன் கட்டுரைகள் – பாடல்கள்
0011 இலக்குவனார் திருவள்ளுவன் கட்டுரைகள் – கதைகள்
0012 இலக்குவனார் திருவள்ளுவன் கட்டுரைகள் – தன்னம்பிக்கைக் கட்டுரைகள்
0013 இலக்குவனார் திருவள்ளுவன் கட்டுரைகள் – கருத்துப்பதிவுகள்
0014 இலக்குவனார் திருவள்ளுவன் கட்டுரைகள் – பிற